அல்லோபதி மருத்துவ முறையில் நிறைவு காணாத மேதை பாச் அவர்களின் மருத்துவத் தேடல்களில் ஒரு படிக்கட்டாக அமைந்தது குடற்பூஞ்சை மருத்துவம் (Bowel Nosodes). இது மலர் மருத்துவ முறை, மெய்யியல் மருத்துவ முறை ஆகியவற்றுக்கும் முந்தியதும் முன்னோடியானதும் ஆகும்.
இம் மருத்துவ முறையின் நன்மையான விளைவுகள், அல்லோபதி, ஓமியோபதி மருத்துவர்களின் கவனத்தையும் ஈர்த்தது.
இம் மருத்துவ முறை பற்றி மரு. கு. பூங்காவனம் ஐயா அவர்கள் “ஓமியோபதியில் குடற்பூஞ்சை மருந்துகள்” என்ற நூலை எழுதியிருக்கிறார்.
குடற்பூஞ்சை மருந்துகள் பற்றித் தமிழில் வெளிவந்துள்ள நூல் இது ஒன்றேயாகும்.