Monthly Archives: December 2018

இணையத்தில் தமிழ் பொத்தகங்கள்

A well known great site for Tamil books on the Net is https://www.projectmadurai.org/pmworks.html. It has one of the largest collection of Tamil classics.

For Tamil Novels, I found https://tamil-desiyam.com has a good collection.  I have given a few links here.  You will find a lot of interesting books in that website.

சுஜாதா எழுதியவை

பாலகுமாரன்

ஜெயகாந்தன்

கல்கி

 

 

உலக முதன்மொழி தமிழ்

 

 

 

 

 

 

நூல் : உலக முதன்மொழி தமிழ்
ஆசிரியர் : பேரா. கு. பூங்காவனம்

முதல் பதிப்பு : 1986
இரண்டாம் பதிப்பு : 2010
விலை : உரு. 90/-
வெளியீடு : தமிழ்மண் பதிப்பகம்சென்னை

இந்நூலின் சில பக்கங்களை இங்கே காணலாம்.

 

 

திருக்குறள் தேசீய நூல் ஆக வேண்டுமா?

 

 

 

 

 

 

நூல் : திருக்குறள் தேசீய நூல் ஆக வேண்டுமா?
ஆசிரியர் : மரு. கு. பூங்காவனம்

ஆண்டு : 2014
விலை : உரூ. 20/-
வெளியீடு : எழுத்தாணி, சென்னை

இந்நூல் முழுவதையும் இங்கே படிக்கலாம்.

நூலை பதிவிறக்கம் செய்ய  இங்கே சொடுக்கவும்.

 

வேல் வகுப்பு + வேல் மாறல்

வேல் வகுப்பு

Courtesy : http://www.kaumaram.com/vaguppu/vgp03.html

பருத்தமுலை சிறுத்தஇடை வெளுத்தநகை
கறுத்தகுழல் சிவத்தவிதழ் மறச்சிறுமி
விழிக்குநிக ராகும்  …… 1

பனைக்கமுக படக்கரட மதத்தவள
கசக்கடவுள் பதத்திடுநி களத்துமுளை
தெறிக்கவர மாகும்  …… 2

பழுத்தமுது தமிழ்ப்பலகை யிருக்குமொரு
கவிப்புலவன் இசைக்குருகி வரைக்குகையை
யிடித்துவழி காணும்  …… 3

பசித்தலகை முசித்தழுது முறைப்படுதல்
ஒழித்தவுணர் உரத்துதிர நிணத்தசைகள்
புசிக்கவருள் நேரும்  …… 4

சுரர்க்குமுநி வரர்க்குமக பதிக்கும்விதி
தனக்கும்அரி தனக்குநரர் தமக்குகுறும்
இடுக்கண்வினை சாடும்  …… 5

சுடர்பருதி ஒளிப்பநில வொழுக்குமதி
ஒளிப்பஅலை யடக்குதழல் ஒளிப்பவொளிர்
ஒளிப்பிரபை வீசும்  …… 6

துதிக்குமடி யவர்க்கொருவர் கெடுக்கஇடர்
நினைக்கினவர் குலத்தைமுத லறக்களையும்
எனக்கோர்துணை யாகும்  …… 7

சொலற்கரிய திருப்புகழை யுரைத்தவரை
யடுத்தபகை யறுத்தெறிய வுருக்கியெழு
மறத்தைநிலை காணும்  …… 8

தருக்கிநமன் முருக்கவரின் இருக்குமதி
தரித்தமுடி படைத்தவிறல் படைத்தஇறை
கழற்குநிக ராகும்  …… 9

தலத்திலுள கணத்தொகுதி களிப்பினுண
வழைப்பதென மலர்க்கமல கரத்தின்முனை
விதிர்க்கவளை வாகும்  …… 10

தனித்துவழி நடக்குமென திடத்துமொரு
வலத்துமிரு புறத்துமரு கடுத்திரவு
பகற்றுணைய தாகும்  …… 11

சலத்துவரும் அரக்கருடல் கொழுத்துவளர்
பெருத்தகுடர் சிவத்ததொடை யெனச்சிகையில்
விருப்பமொடு சூடும்  …… 12

திரைக்கடலை யுடைத்துநிறை புனர்கடிது
குடித்துடையும் உடைப்படைய அடைத்துதிர
நிறைத்துவிளை யாடும்  …… 13

திசைக்கரியை முதற்குலிசன் அறுத்தசிறை
முளைத்ததென முகட்டினிடை பறக்கவற
விசைத்ததிர வோடும்  …… 14

சினத்தவுணர் எதிர்த்தரண களத்தில்வெகு
குறைத்தலைகள் சிரித்தெயிறு கடித்துவிழி
விழித்தலற மோதும்  …… 15

திருத்தணியில் உதித்தருளும் ஒருத்தன்மலை
விருத்தனென துளத்திலுறை கருத்தன்மயில்
நடத்துகுகன் வேலே  …… 16

 

வேல் மாறல்

ஓமியோபதியில் குடற்பூஞ்சை மருந்துகள்

நூல் : ஓமியோபதியில் குடற்பூஞ்சை மருந்துகள்
ஆசிரியர் : மரு. கு. பூங்காவனம்

ஆண்டு : 2015
பக்கங்கள் : 155
விலை : உரூ. 120/-
வெளியீடு : எழுத்தாணி, சென்னை

இந்நூல் முழுவதையும் இங்கே படிக்கலாம்

நூலை பதிவிறக்கம் செய்ய  இங்கே சொடுக்கவும்