பட்டறிவுகள் -Experiences

மாற்று மருத்துவங்கள் பற்றி – அதிலும் குறிப்பாக ஓமியோபதி பற்றி வியப்பூட்டும் பட்டறிவுகள் பலர்க்கும் நிகழ்ந்துள்ளன. அவற்றை பலருடனும் பகிர்ந்து கொள்வது மிகவும் நல்லதாகும். ஓமியோபதியைப் பற்றித் தெளிவு பெறாமல் ஊசலாடிக் கொண்டிருக்கும் மனநிலையில் உள்ளவர்களுக்கு ஊக்கம் அளிக்கும் உதவியாக அப் பகிர்வு அமையும்.

ஒவ்வொருவருடைய பட்டறிவையும் பகிர்ந்துகொள்வதற்கு வரவேற்கிறோம். கருத்துரை பகுதியில் அவற்றை எழுதலாம் அவற்றை நாங்கள் முதன்மை பகுதிகளில் இணைத்து விடுகின்றோம், பிறர் வழியாக கேள்விப்பட்டவற்றை அங்குக் குறிக்க வேண்டாம். நீங்கள் குறிப்பிடுபவை உங்களுடைய சொந்தப் பட்டறிவாக இருக்க வேண்டும். அவை பற்றிய பிறருடைய உசாவல்களுக்கு நீங்கள் விடை அளிப்பவர்களாகவும் இருப்பீர்கள். உங்களுடன் தொடர்பு கொள்வதற்கான வழிமுறைகளை நீங்கள் குறிக்க வேண்டும். நீங்கள் மருத்துவராக இருக்க வேண்டும் என்பதில்லை. ஓமியோபதி ஆர்வலராகவும் அல்லது ஓமியோபதி பயனாளியாகவும் இருக்கலாம். நீங்கள் பகிர்ந்து கொள்ளப் போகும் செய்தியின் உள்ளடக்கத்தை அப்படியே பேணி எங்களுடைய குழு அதை இடமாற்றம் செய்வதை மட்டும் மேற்கொள்ளும்.