ஓமியோபதி அறிமுகக் கட்டுரைகள்
மரு.கு.பூங்காவனம்
பக்.168
ரூ.105
தமிழ்மண் பதிப்பகம்
சென்னை – 17
044-24339030
தினமணி நாளிதழில் வெளியான நூல் மதிப்பீடு கீழே காணவும்
ஓமியோபதி மருத்துவத்தைப் பற்றி அதன் அடிப்படையில் இருந்து தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும் நூல். ஓமியோபதி மருத்துவத்தின் சிறப்பியல்புகளைப் பற்றி நூல் முழுக்கக் கூறப்பட்டுள்ளது. மனநலம் காப்பதற்கு உள்ள ஓமியோபதி மருத்துவம், விளையாட்டு வீரர்களுக்கான ஓமியோபதி மருத்துவம் அடிபட்ட காயங்கள், தீப் புண்கள், எலும்புகளில் ஏற்படும் சிதைவுகள், பூச்சி, பாம்புக்கடி, நாய்க்கடி போன்றவற்றிற்கான ஓமியோபதி மருத்துவம் பற்றிய செய்திகள் அடங்கியுள்ள நூல். நூலாசிரியர் ஓமியோபதி மருத்துவராகையால அவர் தனது சொந்த அனுபவங்க¬ளின் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.
தினமணி – திங்கள்கிழமை, 17 மே, 2010
ஓமியோ முரசு இதழில் வெளிவந்த நூல் மதிப்புரை
உலகப் பொதுமறை திருக்குறள் என்று சொல்வது போல ஓமியோபதி ஒரு உலகப் பொதுச்சொத்து என அறிமுக உரையிலேயே உணர்த்தியுள்ளார் ஆசிரியர். முன்னுரையில் சீழும் சொரியும் களிம்புகளாலும் ஊசியாலும் அமுக்கப்பட்டதால், டான்சிலும், குடல்வால் அழற்சியுமாக மாறிவிட்டதுடன் எப்படி அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது என உதாரணங்களுடன் கூறி ஓமியோபதியில் நலமானதையும் விளக்கியுள்ளது பாராட்டத்தக்கது. ஓமியோபதியின் உயிராற்றல், ஒப்புமைக்கொள்கை, வீறியம் மருந்தாற்றல் அடங்கல் (ரெப்பர்டரி) என தத்துவங்களை, படிப்படியாக அழகு தமிழில் விளங்கும்படி எடுத்துரைத்துள்ளார்.
“மாபெரும் நன்னீர் உள்ளது அதுவே ஓமியோபதிச்சுனை” என்று முத்தான வார்த்தைகளில் பொதுமக்களும் ஓமியோபதியை ஆழமாக உணர்ந்து, புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட நன்னூல் ஆகும். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.
ஹோமியோ முரசு – பிப்ரவரி – 2013