மருத்துவப் பண்டுவம் (சிகிச்சை)
பேராசிரியர் கு. பூங்காவனம் கருநாடக மாநில அரசுக் கல்லூரிகளில் தமிழ் பேராசிரியராக பணியாற்றி 2002ஆம் ஆண்டில் ஓய்வு பெற்றவர். அவர்தம் தமிழ்ப் பேராசிரியர் பணியுடன் ஓமியோபதித் தொண்டும் ஒன்றிணைந்த செயல்பாடாகும். அவர் பணியாற்றிய அரசு கல்லூரிகளில் நாற்பதாண்டுகளுக்கு முன்பிருந்து அவர் பணி நிறைவு பெறும் வரை இலவய ஓமியோபதி மருத்துவ தொண்டும் நடைபெற்றது. மாணவர்களும் உடன் பணியாற்றிய பேராசிரியர்களும் அப்பண்டுவத்தால் பயன்பெற்றனர்.
பெங்களூர்த் தமிழ்ச் சங்கத்தில் கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளாக இலவய ஓமியோபதி மருத்துவத் தொண்டு நடைபெற்று வருகிறது. இதுவரை ஓர் இலக்கத்திற்கு மேற்பட்ட எண்ணிக்கையினர் அம் மருத்துவ உதவியால் பயன்பெற்றுள்ளனர். பெங்களூர் தமிழ்ச் சங்கத்தைப் பற்றிய மேலும் பல தகவல்களை இங்கே அவர்களுடைய வலைத்தளத்தில் காணலாம்.
பேராசிரியரின் எழுத்துப் பணிகளுக்கு தடை ஏற்படாதவாறு இரண்டு மணி நேரம் ஒதுக்கி அவர் தம் இல்லத்திலும் “பாவாணர் நினைவு இலவய ஓமியோபதி பண்டுவம்” தொடர்கிறது.
Prof. K. Poongavanam retired as a Tamil professor in the year 2002.
Since 40 years ago and till his retirement, Free Homoeo clinical facility was provided by him at the Govt. colleges he was posted. Students and Teachers were benefited.
For the last thirty two years, a Free Homoeo clinic at Bangalore Tamil Sangam is effectively functioning. Over one lakh people from far and near have availed this facility.
Without an interference for his writing work in his house he has set apart two hours in a day to provide Homoeo treatment, in the memory of his mentor – Devaneya Pavanar.
Met Perasiriyar on 7th March 2018 in the free clinic and he presented his latest book
MALAR MARUTHTHUVA MEYYIYAL KATTURAIGAL. Translation book. original by Edward Bach (Free thyself, Ye suffer from yourselves etc.,) This book is Professor’s
19th book.
Long live Professor and his contribution through books.