Category Archives: Tissue Remedies

பண்பலை நிகழ்ச்சி – AIR FM Rainbow Program (2013)

முழு நிகழ்ச்சியும் இங்கே ஐந்து பாகங்களாக பிரிக்கப் பட்டு பதிவேற்றப் பட்டுள்ளது.

The full talk has been uploaded to Youtube in five parts.

ஒலிப்பதிவின் பாகம் 1 – This is the first of the five parts

ஒலிப்பதிவின் பாகம் 2 -This is the second one.

ஒலிப்பதிவின் பாகம் 3 -This is the third.

ஒலிப்பதிவின் பாகம் 4 -This is the fourth one.

ஒலிப்பதிவின் பாகம் 5  -The final one.

2015 பன்னிரு திரளை உப்பு மருத்துவ வகுப்பு -Tissue Salts (BioChemic) Remedies Course

2015 ஆம் ஆண்டு பெங்களுரில் நடைபெற்ற மரு. கு. பூங்காவனம் அவர்களுடைய “பன்னிரு திரளை உப்பு மருந்துகள்” – தொடர் வகுப்பின் ஒளிப்படிவுகள் இணையத்தில் எட்டு பாகங்களாக பதிவேற்றப்பட்டுள்ளன. அவை அனைத்தும் இங்கே கிடைக்கும்

Dr. Poongavanam conducted a course on Tissue Remedies in Bangalore starting on 22nd Feb 2015.  The Video recordings of the lecture sessions have been uploaded to Youtube.  The Youtube playlist containing all the eight parts are available  here.

ஓவ்வொரு பகுதிக்கான சுட்டிகள், கீழே.

Links for each individual parts are  given here.

பகுதி -1 – Part 1

பகுதி -2 – Part 2

பகுதி -3 – Part 3

பகுதி -4 – Part 4

பகுதி -5 – Part 5

பகுதி -6 – Part 6

பகுதி -7 – Part 7

கடைசிப் பகுதி – Final Part

ஒளிப்பதிவுகளில் இருப்பதை விட கீழ்க்கண்ட ஒலிப்பதிவுகளின் தரம் சற்று நன்றாக இருக்கும்.

For better quality audio, please click on the audio only links here.

எல்லா அமர்வுகளும் – Full playlist

அமர்வு 1 – Session 1

அமர்வு 2 – Session 2

அமர்வு 3 – Session 3

அமர்வு 4 – Session 4

The slides prepared for the course are available for download as PDF.

Slides.pdf

வீட்டுக்கு வீடு பன்னிரு திரளை உப்பு மருத்துவம்

thiralai_book2.PNG

நூல் : வீட்டுக்கு வீடு பன்னிரு திரளை உப்பு மருத்துவம்

ஆசிரியர் : கு. பூங்காவனம்

வெளியீடு : தாமரை பதிப்பகம், சென்னை : தொலைபேசி :044-26258410

இந்நூலைப் பற்றிய முன்னுரை மற்றும் சில கருத்துரைகளை கீழே காணலாம்

இந்நூல் பதிப்பகத்தார்க்குக் காப்புரிமை உடையது. நூலின் படியைப் பெற பதிப்பகத்தாரைத் தொடர்பு கொள்ளவும்.

பன்னிரு திரளை உப்பு மருந்துகள்

thiralai_book.PNG

பன்னிரு திரளை உப்பு மருந்துகள்

மரு.கு.பூங்காவனம்;
பக்கங்கள் : 112
விலை : உரு.70
தமிழ்மண் பதிப்பகம்,
சென்னை – 17

தினமணி நாளிதழில் வெளியான நூல் மதிப்பீடு கீழே காணவும்

நமது உடல் திசுக்களால் ஆனது. திசுக்கள் உருவாவதில் மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் புளோரைடு, கால்சியம், பாஸ்பரஸ், நேட்ரம் சல்பூரிகம் போன்ற பல்வேறு தாது உப்புப் பொருட்களுக்கு பங்குண்டு. மனித உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாக இத் தாது உப்புகளைப் பயன்படுத்தும் புதிய மருந்து வழிமுறையே திரளை உப்பு மருந்துகள். ஓமியோபதி மருத்துவத்திலும் இந்த மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருத்துவத்தைப் பற்றி அறிமுகம் செய்யும் நூல். இந்த மருந்துகளைப் பற்றியும் இந்த மருந்துகளால் குணமாகும் நோய்களைப் பற்றியும் விரிவாகக் கூறும் நூல், பல்வேறு மருத்துவமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும் நூல்.

தினமணி – திங்கள்கிழமை, 24 மே, 2010

நூலின் சில பகுதிகள் தொகுத்தளித்தவர் : திருமதி. உமா அரிகரன்

பாவாணர் தம் கொள்கை வழி நின்று தமிழ் – தமிழர் காப்புக்கும், வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அரும்பாடுபட்டு வரும் தமிழ் அறிஞர் மரு.கு.பூங்காவனம் அவர்கள் எழுதிய நூல் “பன்னிரு திரளை உப்பு மருந்துகள்”.

இதனைப் படித்திட வாய்ப்புப் பெறும் நாம் – நாமும் பயன்பெற்று பிறரும் பயனடைய உதவுவதைச் சமுதாயக் கடமையாகக் கொள்வதே நோயற்ற சமுதாயத்திற்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு ஆகும்.

அந் நூலின் சில மணித்துளிகள்
முன்னுரை:

நோயின் சுவடு ஏதும் இல்லாமல் முற்றிலும் ஒழிக்கின்ற ஓமியோபதி மருத்துவ முறைக்கும், ஏனைய பிற மருத்துவ முறைகளுக்கும் இடைப்பட்டதாகவும் குறிக்கத்தக்க குறையேதும் இல்லாததாகவும் அமைந்திருப்பது திரளை உப்பு மருத்துவம் ஆகும்.
ஓமியோபதி மருத்துவர்களுக்குத் துணை மருத்துவமுறையாக உள்ள இம் மருத்துவம், அந் நிலையிலேயே நில்லாமல் வீட்டு மருத்துவ முறையாகவும் பயன்படுதல் வேண்டும்.

குறிப்புகள்:

மருத்துவ மேதை சுசுலர் – ஓமியோபதி மருத்துவ முறை கண்டுபிடிப்பாளர் மாமேதை சாமுவேல் ஆனிமான் தோன்றிய அதே செருமன் நாட்டில் ஒல்டன்பர்க்கு என்னுமிடத்தில் தோன்றியவர் மருத்துவர் மெட்.டபிள்யூ. எச்.சுசுலர் என்பவர் ஆவர்.
அவர் மரபுசார் மருத்துவ கல்விக்குப் பின்னர் ஓமியோபதி மருத்துவ முறைக்கு மாறியவர். இவரே பன்னிரு திரளை உப்பு மருத்துவ முறையை உருவாக்கித் தந்தவர். இதனை அவர் உயிர் வேதியியல் மருத்துவமுறை எனக் குறித்தார்.

உயிரணுக்களும் குருதியும்

நமது உடம்பில் உள்ள எல்லா உயிரணுக்களுக்கும் அவற்றிற்கேற்ற ஊட்டத்தை எடுத்துச் சென்று வழங்குவது குருதி.
குருதியை ஆராய்ந்து அதன் உள்ளடக்கப் பொருள்கள் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. குருதியில் உள்ளவை உறுப்புச் சார்பின் (Organic), உறுப்புச் சார்பற்றன (Inorganic) என இரண்டாகப் பகுக்கப் பெற்றன. அவை

உறுப்புச் சார்பானவை 
1. கொழுப்பு
2. சர்க்கரை
3. வெண்புரதம்

உறுப்புச் சார்பற்றவை
1. நீர்
2. சோடியம் குளோரைடு
3. கால்சியம் புளோரைடு
4. சிலிசிக் ஆசிடு
5. அயம்
6. கால்சியம்
7. மக்னீசியம்
8. சோடியம்
9. பொட்டாசியம

உறுப்புச் சார்பற்றவற்றுள் நீரைத் தவிர எஞ்சியவை அவற்றுள் கூட்டுப் பொருள்களுடன் பின் வருமாறு பன்னிரெண்டாக உள்ளன.

1. கல்காரியா ஃபுளோரிகம்
2. கல்காரியா பாசுபாரிகம்
3. கல்காரியா சல்பூரிகம்
4. பெரம் பாசுபாரிகம்
5. காலி மூரியாடிகம்
6. காலி பாசுபாரிகம்
7. காலி சல்பூரிகம்
8. மக்னீசியம் பாசுபாரிகம்
9. நேட்ரம் மூரியாடிகம்
10. நேட்ரம் பாசுபாரிகம்
11. நேட்ரம் சல்பூரிகம்
12. சைலீசியா

குருதிப் பொருள்களில் ஐந்து விழுக்காட்டளவில் உள்ள உறுப்புச் சார்பிலாப் பொருள்கள் இன்றேல் ஏனையவை இயக்கமற்ற தேக்கநிலையை அடைந்தும் கட்டுக் குலைந்தும் அழிந்துபடும். அவ்வாறு அவை கெடாமல் கட்டிக் காத்தும் அவற்றை இயக்கியும் காப்பவை ஐந்து விழுக்காடு உறுப்புச் சார்பிலாப் பொருள்களேயாதலால் அவற்றின் சீர்மையும் சமநிலையும் பாதிக்கப்படின் நோய்த் துன்பங்கள் உண்டாகும் என்பதும் வெளிப்படையாகிறது.

திரளை உப்பு மருந்துகள்

இப் பன்னிரெண்டு மருந்துகளும் திரளை உப்பு மருத்துவம், ஓமியோபதி மருத்துவம் ஆகிய இரண்டு முறைகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.

இத்திரளை உப்பு மருந்துகளைப் பயன்படுத்தியவர்கள் ஓமியோபதி மருத்துவர்களாகவும் இருந்தனர். அவர்கள் ஓமியோ, திரளை உப்பு மருந்துகளைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தினர்.

1. கல்காரியா ஃபுளோரிகம் – நெகிழ்வுத் திரளை அணுக்களுக்குரியது

2. கல்காரியா பாசுபாரிகம் – எலும்பு அணுக்களுக்கு உரியது

3. கல்காரியா சல்பூரிகம் – சீழ்கட்டும் நிலைகளுக்கு பயன்படுகிறது

4. பெரம் பாசுபாரிகம் – குருதி அணுக்கள், தசை அணுக்கள்
முதலானவற்றின் உட்பொருளாக காணப்படுகிறது

5. காலி மூரியாடிகம் – நரம்பு அணுக்களில் காணப்படும் உறுப்புச் சார்பிலாப் பொருள் ஆகிய மெக்னீசியம் பாசுபாரிகம், பொட்டாசியம் பாசுபாரிகம், கால்சிய்ம் என்னும் இவை பொட்டாசியம் குளோரைடு
என்பதோடு சேர்ந்து தசையணுக்களில் உள்ளன.

6. காலி பாசுபாரிகம் – மூளை, நரம்புகள், தசைகள், குருதி அணுக்கள், ஆகியவற்றில் உள்ளது. மூளை அசதி, மூளையில் அடிபடுவதால் உண்டாகும் பாதிப்புக்கு இது மருந்தாகக் கூடும்.

7. காலி சல்ஃபூரிகம் – மேற் புறத் தோல், தோலின் அடுக்கு ஆகியவற்றின் செயல்பாடுகளுக்குச் காலி சல்ஃபூரிகம் உரியதாகும்.

8. மெக்னீசியம் பாசுபாரிகம் – இது தசை நரம்பு திரளைகளில் உள்ள கனிமப் பொருளாகும். இஃது எலும்புகளில் உள்ளது.

9. நேட்ரம் மூரியாடிகம் – உணவு உப்பு உடம்பின் நீரியல் பகுதி, திண்மைப் பகுதி ஆகிய எல்லாவற்றிலும் உள்ளது.

10. நேட்ரம் பாசுபாரிகம் – மிகையான பால் அமிலத்தால் உண்டாகும் நோய்களுக்கு இவை தேவைப்படுகின்றன.

11. நேட்ரம் சல்பூரிகம் –  கிளாபர் உப்பு என்னும் சோடியம் சல்ஃபேட்டும், உணவு உப்பு ஆகிய சோடியம் குளோரைடும் எதிர் நிலையில்  செயலாற்றுகின்றன. உயிர் அணுக்களில் சேர்ந்த நீரைச் சோடியம் சல்ஃபேடு வெளியேற்றுகின்றது.

12. சைலீசியா – இணைப்புத் திரளைகளிலும், தோலிலும்,
முடியிலும் நகங்களிலும் சிலிகா அமைந்துள்ளது

நோய் அறிகுறிகளை நன்கு அறிந்த பின்னும் அத்தகைய அறிகுறிகளைக் கொண்ட பல மருந்துகளுள்ளும் உரிய ஒரு மருந்தை வேறுபடுத்தித் தேர்ந்து கொள்வதாலேயே அந் நோயை மிக விரைந்து போக்க முடிகிறது.

பிறந்த நாள், திருமணம் மற்றும் விழாக்காலங்களில் உறவினர் நண்பர்களுக்கு பரிசுப் பொருளாகக் கொடுக்கத்தக்க வண்ணத்தில் இந்த பதிப்பு வெளி வந்துள்ளது.