மரு. கு. பூங்காவனம் ஐயா அவர்களுடைய தொண்டுகளை பாராட்டி பெங்களூர் தமிழ்ச் சங்கம் வழங்கிய சான்றிதழின் தமிழாக்கம்.
பாராட்டுச் சான்றிதழ்
மரு. கு. பூங்காவனம் அவர்கள் கடந்த முப்பத்திரண்டு ஆண்டுகளாகப் பெங்களூர் தமிழ்ச் சங்கத்தின் இலவய ஓமியோபதி மருத்துவக் கூடத்தின் கண்ணிய மருத்துவராக தொண்டாற்றி வருகிறார். அவர்தம் மருத்துவத்தினால் இதுவரை ஓர் இலக்கத்திற்கு மேற்பட்ட துயரர்கள் நன்மை அடைந்துள்ளனர். அதுமட்டுமின்றி தன்னுதவி ஓமியோ – மாற்று மருத்துவ பயிற்சி வகுப்புகள், கருத்தரங்குகள் ஆகியவற்றைப் பலமுறை நடத்தியுள்ளார். இலவய மருத்துவ முகாம்களும் நடத்தப்பட்டுள்ளன.
மரு. கு. பூங்காவனம் அவர்கள் இருபதுக்கும் மேற்பட்ட நூல்களை எழுதியுள்ளார். அவற்றுள் மாமேதை ஆனிமானின் ஓமியோபதி நெறிமுறை, நெடுநோய்க் கோட்பாடு ஆகியவற்றின் தமிழாக்கமும் அடங்கும்.
மரு. கு. பூங்காவனம் அவர்களின் மருத்துவத் தொண்டிற்கு நன்றியுணர்வுடன் பாராட்டுச் சான்று அளித்து மகிழ்கிறேன்.
தலைவர்
பெங்களூர் தமிழ்ச் சங்கம்