மாற்று மருத்துவம் ஏன்? எதற்கு? – Alternate Medicine

திருடர்களை விரட்டிக் கொண்டு செல்கின்ற காவலர்களைப் போலவே நோய்களை விரட்டிக்கொண்டு செல்கின்றவையாக மருத்துவ முறைகள் உள்ளன. அத்தகைய செயலால் சில வேளைகளில் நோய்த் துன்பங்களைக் குறைக்க முடிகின்றதேயன்றி, அவற்றைத் தடுக்கவும் குணமாக்கவும் முடிவதில்லை.

தனித்தனி மாந்தரும் தத்தம் நலத்தை பேணிக்காத்துக் கொள்வதில் பெரும் பங்கு உடையவர் ஆவர். மருத்துவர்களையே முழுமையாக  நம்பிக்கொண்டு மாந்தர்கள் தங்களை இழந்து விடக்கூடாது. தம் மனத்திலும் உடம்பிலும் உள்ள நோயின் இயல்புகளை அவரவர்களே அறிந்து கொள்ளமுடியுமேயன்றிப் பிறரால் அவற்றை முழுமையாக அறிந்து கொள்ள முடியாது.

குளிக்கப் போய்ச் சேற்றை பூசிக்கொள்வது போல மருத்துவத்துக்குச் சென்று நோய்த்துன்பங்களைப் பெருக்கிக் கொள்கிற நிலையும் அவ்வப்போது காணப்படுகிறது.

அளவான வருமானம் உள்ளவர்களால் மருத்துவப் பண்டுவங்களுக்குப் பெரும் பணம் செலவு செய்யவும் முடிவதில்லை.

எனவே, விழிப்புணர்வும் அறிவுத் தேடலும் உடைய ஒவ்வொருவரும்

  • நோய்கள்
  • மருந்துகள்
  • மருத்துவங்கள்   –  அவற்றின் விளைவுகள்

என்பவை பற்றிப் பொதுவாக அறிந்து கொள்ள வேண்டியவர்கள் ஆவர். அதோடு தத்தமக்கு ஏற்றவாறும் பொருந்துமாறும் உள்ள எளிய மருத்துவ முறைகளில் ஏதேனும் ஒன்றில் ஓரளவு தேர்ச்சி பெறவேண்டியவர்களும் ஆவர்.  அத்தகைய நோக்கத்துக்குப் பொருந்துமாறு உள்ளவை மாற்று மருத்துவங்களேயாகும்.  ஏனென்றால், ஆங்கில மருத்துவ மருந்துகள் பல்வேறு வகையான பக்க விளைவுகளைக் கொண்டுள்ளவையாதலால், அம் மருந்துகள் அம் மருத்துவ முறைக் கல்வியுடையவர்களால் மட்டுமே மருத்துவக் குறிப்பாக தரக் கூடியவையாகும்.  எனவே தான் பிறர், தன்னுதவியாக அம் மருந்துகளைப் பயன் படுத்தக்கூடாது என்றும் வலியுறுத்தப் படுகிறது.

அத்தகைய மாற்று மருத்துவங்களுள் இங்கு சிறப்பாக கூறப்படுபவை

  1. ஓமியோபதி மருத்துவம்
  2. பன்னிரு திரளை மருத்துவம்
  3. மலர் மருத்துவம்

என்பவை

 

Alternate Medicine

what is the need of Alternate Medicine?

The diseases undergo drastic changes due to many factors. One such major factor is Medicinal side effects of Modern Medicine and the present day Medical Science is unable to face such challenges. It is like chasing criminals equipped with new techniques . Due to this reason we find a host of “new diseases” for which no remedy is found yet and at the most the diseases could only be palliated to some extent

in this state of affairs every individual has to take some measures to maintain one’s own health, than to entirely rely on medical professionals.

As the individuals go through the changes that take place within themselves and undergo the sufferings, they themselves are the best judge to assess their own health.  So, it is the individual’s responsibility to find a solution also.

Moreover, people from Middle class society can ill afford the expensive medical facilities. Therefore, it is necessary for an enlightened individual to know about the diseases, the medicines and the best suited treatment for him.

Acquiring Allopathic medical knowledge is impossible for a lay person and self medication of those drugs is prohibited for good

Here comes the Alternate Medicine as a saviour. There are a number of Alternate Medical Systems- with medicine or without and it is for the individual to make his choice.

The Alternate Medicines emphasised here are
Homoeopathy
The Twelve Tissue Remedies, and
The Flower Medicines

It is possible for a reasonably gifted individual to acquire sufficient knowledge of these Alternate Medicines over a period of time, so as to meet the medical need of one’s own self and his family.

 

 

 

 

One thought on “மாற்று மருத்துவம் ஏன்? எதற்கு? – Alternate Medicine

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


The maximum upload file size: 32 MB.
You can upload: image, audio, video, document, spreadsheet, interactive, text, archive, code, other.