Monthly Archives: May 2019

மரு. அனிமான் -264வது பிறந்த நாள் – 264th Birthday of Dr. Hahnemann

28.4.2019 அன்று பெங்களுர் தமிழ்ச் சங்கத்தின் திருவள்ளுவர் அரங்கில் மருத்துவ மாமேதை சாமுவேல் அனிமான் அவர்களின் 264-வது பிறந்த நாள் பேரா. பூங்காவனம் ஐயா அவர்களின் தலைமையில் வெகு சிறப்பாக கொண்டாடப் பட்டது.

நிகழ்ச்சியின் சிறப்பு விருந்தினராக வருகை தந்த மரு. கைலாசம் ஐயா அவர்கள் மிகவும் அருமையாக சொற்பொழிவாற்றினார்.  ஓமியோபதி மருத்துவம் எத்தனை மகத்தானது என்பதை  புரிந்து கொள்ள அவருடைய சொற்பொழிவை கேட்டால் போதும். அன்று அதைக் கேட்க வாய்ப்பில்லாமல் போனவர்களுக்காக அதை இங்கே பதிவேற்றம் செய்திருக்கிறோம்.

மரு. கிரிசா அவர்களுடைய “திரை இசையில் ஓமியோபதி” விரிவுரை, இதுவரை யாரும் கண்டிராத ஒரு புதிய கோணத்தைக் காட்டியது.

அதே போல், திரு. அல்போன்சு அவர்களின் “அனிமான் வாழ்க்கையில் ஒரு நாள்” ஒலிச் சித்திரம், ஒரு மாறுபட்ட நிகழ்ச்சியாகவும், கேட்பவர்களை ஒரு கனவுலகத்திற்கு அழைத்துச் செல்லும் வகையிலும் அமைத்திருந்தது.

கடல் கடந்து போனாலும் எங்களோடு எப்போதும் மனதளவில் கூடவே இருக்கும் திருமதி விசயா அவர்கள் நியூசிலாந்து நாட்டில் இருந்து அனுப்பிய ஒலிப்பதிவு, நிகழ்ச்சியின் மறக்க முடியாத முத்தாய்ப்பாக அமைந்தது. அது, அந்த நாட்டில் வாழும் அவருடைய தோழி ஒருவர் எவ்வாறு ஓமியோபதியால் குணமடைந்தார் என்று அவரே பேசி பதிவு செய்து அனுப்பியது. அதையும் நாம் கீழே கொடுத்திருக்கிறோம்.

நிகழ்ச்சியின் ஒலிப்பதிவுகளின் சுட்டிகள், கீழே.

பேரா. பூங்காவனம் ஐயா அவர்களுடைய முடிவுரை

மரு. கைலாசம் ஐயா அவர்களுடைய சிறப்புரை

மரு. கிரிசா அவரிகளின் “திரையிசையில் ஓமியோபதி”

திரு. அல்போன்சு அவர்களின் “அனிமான் வாழ்க்கையில் ஒரு நாள்”

திரு. ராசராசன் அவர்களின் “நான் கண்ட அனிமான்”

திருமதி. உமா அரிகரன் அவர்களின் “ஓமியோபதியின் மாயாஜாலம்”

ஓமியோ அறக்கட்டளையின் பொறுப்பாளர் திரு. இராமச்சந்திரா அவர்களின் அறிமுக உரை

திருமதி கீதாவாணி கோகுல் அவர்களின் வரவேற்புரை

திருமதி விசயா அவர்களின் தோழி திருமதி வித்யா மணிகண்டன் அவர்கள் நியூசிலாந்தில் இருந்து அனுப்பிய ஒலிப்பதிவு.

நிகழ்ச்சியின் போது எடுக்கப்பட்ட புகைப்படங்களில் சிலவற்றை இங்கே காணலாம்.