பயிலரங்குகள்

ஓமியோபதி, மலர் மருத்துவம், பன்னிரு திரளை உப்பு மருத்துவம் ஆகிய மாற்று மருத்துவங்களை பரப்புவதற்கும், அவற்றின் நன்மைகள் மக்களைச் சென்றடைவதற்கும் மரு. பாச் அறக்கட்டளை தொடங்கப்பட்டது.

அவ் வகையில் மருத்துவ ஆர்வலர்களுக்கும் பொது மக்களுக்கும் பயன்படுமாறு வகுப்புக்களையும் பயிலரங்குகளையும் நடத்தி வருகிறோம்.

இப் பயிலரங்குகள் பற்றித் தங்களுடைய கவனத்துக்கு கொண்டு வருவதுடன், இப் பயிலரங்குகளைத் தங்களுடைய ஊரில் தங்களுடைய அமைப்பின் சார்பில் நடத்தவும், அதன் வழி மாற்று மருத்துவ நன்மைகள் மக்களை சென்றடையவும் தங்களுடைய ஒத்துழைப்பை வேண்டுகின்றோம்.

1. மாற்று மருத்துவ அறிமுகப் பயிலரங்கு
 • இரண்டு அமர்வுகளை கொண்டது
 • மூன்று மணி நேரத்தில், அரை நாளில் நடத்தப் பெறுவது
 • பொதுமக்களுக்கு உரியது
2. பன்னிரு திரளை உப்பு மருத்துவ பயிலரங்கு
 • நான்கு அமர்வுகளை கொண்டது
 • ஆறு மணி நேரத்தில், ஒரு நாளில் நடத்தப் பெறுவது
 • ஓமியோபதி மாணவர்கள், ஆர்வலர்கள், மருத்துவ பயிற்சியாளர்கள், பொதுமக்கள் ஆகியோருக்கு உரியது
3. மலர் மருத்துவ பயிலரங்கு
 • எட்டு அமர்வுகளை கொண்டது
 • பன்னிரண்டு மணி நேரத்தில், இரண்டு நாள்களில் நடத்தப் பெறுவது
 • அனைத்து மருத்துவமுறைப் பயிற்சியாளர்கள், மாணவர்கள், ஆர்வலர்கள், பொதுநலத்தொண்டர்கள், பொதுமக்கள் ஆகிய அனைவருக்கும் உரியது
எதிர்காலப் பயிலரங்குத் திட்டம்
 • ஓமியோபதி நெறிமுறை (Organon) நெடு நோய்க் கோட்பாடு பற்றியது
 • எட்டு அமர்வுகளைக் கொண்டதாகவும், பன்னிரண்டு மணி நேரத்திலும் இரண்டு நாள்களிலும் நடத்துவதற்கு ஏற்றவாறும் திட்டமிடப்பட்டு வருகின்றது. இது ஓமியோபதி மருத்துவ பயிற்சியாளர்களுக்கும் மாணவர்களுக்கும் உரியதாக அமையும்.

 

பயிலரங்குகள் பற்றிய குறிப்புகள்
 • எல்லாப் பயிலரங்குகளும் காணொலிக் காட்சி (video presentation) யுடனும், விளக்க உரையுடனும் அமைந்துள்ளன. அதற்கு ஏற்றவாறு அரங்கு, ஒலி, ஒளி அமைப்புகள் (Audio & Projection systems) ஏற்பாடாகியிருத்தல் வேண்டும்.
 • காணொலிக் காட்சிகளின் எழுத்து வடிவப் படி, பயிலரங்கு ஏற்பாடு செய்பவர்களுக்கு முன்னமே அனுப்பி வைக்கப்படும். அதன் படப்படியை (xerox copy) ப் பேராளர்களுக்கு வழங்கலாம்.
 • பயிலரங்கு ஆசிரியர், பாச் அறக்கட்டளைப் பொறுப்பாளர்கள் என நால்வருக்கான போக்குவரத்து, உணவு, உறைவிடச் செலவுக்கான தொகையை மட்டும் பயிலரங்க ஏற்பாட்டாளர்கள் வழ்ங்கினாற் போதுமானது.

மரு, பாச் அறக்கட்டளையுடன் தொடர்பு கொள்ள விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும்

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

You may use these HTML tags and attributes: <a href="" title=""> <abbr title=""> <acronym title=""> <b> <blockquote cite=""> <cite> <code> <del datetime=""> <em> <i> <q cite=""> <strike> <strong>