ஓமியோபதி மருத்துவ நெறிமுறை

organon_book.PNGநூல் : ஓமியோபதி மருத்துவ நெறிமுறை
ஆண்டு : 2013
வெளியீடு : வேங்கை பதிப்பகம், மதுரை

நூலின் சில பகுதிகள் –  தொகுத்தளித்தவர் : திரு. ஆ. கணேசன்

ஆங்கில மருத்துவத்தில் நோய்த் துன்பங்களுக்கு எதிரான மருந்துப் பொருள்கள் பயன்படுத்தப் படுகின்றன.. வரையறுக்கப்பட்ட வேறு மருத்துவக் கொள்கை எதும் அத்துறையில் இல்லாமையால், அது ஒரு நோய் தணிவிப்பு மருந்தாகவும், அவ்வப்போது மாற்றங்கள் பலவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டியதாகவும் உள்ளது. அன்றியும் பல நோய்கள் அங்குத் தீரா நோய்கள் என்று குறிக்கப்படுகின்றன.

ஓமியோபதி மருத்துவமுறையில்

  • நோய் விரைவாக நீங்குதல்
  • துன்பமில்லாமல் நீங்குதல்
  • நிலையாக நீங்குதல்
  • தீரா நோய்களும், நெடுநோய்களும் நீங்குதல்

இது போன்ற பல நன்மைகள் காணப்படுகின்றன. 

உலகப் புகழ்பெற்ற இந்நூலின் திருத்தமான தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாத குறையைப் போக்கியவர் பேரா. கு. பூங்காவனம்.
பேரா. மருத்துவர்.கு.பூங்காவனம் அவர்கள் தன் முன்னுரையில் ஓமியோபதி நெறிமுறை நூல் இதனை ஓமியோபதியில் பைபிள் என்பது அக்கால வழக்கு. ஆயின், இதனை ஓமியோபதிச் சட்ட நூல் என்பதே மிகவும் பொருத்தமானதாகும். சட்ட நெறிகளைப் பின் பற்றாமையும், மீறுவதும், அவற்றிற்கு மாறாக நடப்பதும் தண்டனைக்குரிய குற்றச் செயல்களாகும். இவ் ஓமியோபதிச் சட்ட நூலும் அவ்வாறே பின்பற்றுவதற்கு உரியது என்பது மட்டுமின்றி, இதில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் யாரும் ஒமியோபதி மருத்துவத்தில் வெற்றி காணவும் இயலாது. இம் மாபெரும் மருத்துவச் சட்ட நூல், அதற்குரிய மதிப்போடு இதுவரை தமிழில் வெளிவரவில்லை. இவ்வகையில் இதுவரை எழுந்த முயற்சிகள் எல்லாம் ஓமியோபதி நெறிமுறைகளை சரிவர புரிந்து கொள்ள முடியாதவாறு அவற்றின்றும் சேய்மைப் படுத்துவவாகவே அமைந்துவிட்டன.

கடுநோய், நெடுநோய்

கடுநோயில் நோய் மிகுவிப்புக்காரணியாவது என அறிதல் வேண்டும். நெடுநோயில் அடிப்படைக் காரணியை அறிதல் வேண்டும். நோயாளியின் உடல்வாகு, அவர்தம் ஓழுக்கம், அறிவு நிலை, அவர்தம் தொழில், வாழ்முறைப் பழக்கங்கள், அவர்தம் குடும்ப, குமுகியல் உறவு நிலைகள், அகவை, பாலியல் செயல்பாடுகள் இவைகளையும் மருத்துவர் கருத்தில் கொள்ள வேண்டும். நோயின் உருவம் – நோய் வினைப்பாடுகள், நேர்ச்சிகள், அறிகுறிகள் ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். நோயாளியே உணர்ந்து கூறத்தக்கவை; அருகில் உள்ள பிறர் கண்டு கூறத்தக்கவை; மருத்துவர் நோக்கி அறியத்தக்கவை. மொத்தக்குறிகள், நோய்க்குறிகளின் நீக்கமே நலத்தின் ஆக்கம்.

உயிராற்றல்

கண்ணுக்கு புலனாகாமல் ஆவி நிலையில் இருப்பது உயிராற்றல். பருப்பொருளாக உள்ள உடலே உறுப்பமைவு. உயிராற்றல் உறுப்பு அமைவை இயக்கி ஒத்திசைவுடன் நடத்துகிறது. நம்மை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்து ஆள்கிறது. உடலை இயக்கும் உயிராற்றல் – நோயுற்ற போதும், நோய் நீங்கிய காலத்தின் போதும் உடலுக்கு உயிரூட்டி செயல்படுத்துகிறது.
உயிராற்றலின் பாதிப்பே நோய், உயிராற்றலின் மீட்சியே நலம்

அறிகுறிகளே நோயின் வெளிப்பாடு

உயிராற்றலுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு – உயிராற்றலையும், உறுப்பமைவையும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாதவாறு ஒன்றிப் பிணைந்துள்ளவை என்பதை இங்கு தெளிவாக்கினார்.

குடம்பை தனித்தொழியப் புண் பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.

ஆனிமான் கூறிய விளக்கமும் உடன் வைத்து எண்ணத்தக்கவை.

நோயை முழுமையாய்ப் போக்குதல்

மொத்தக் குறிகளே மருந்துக் தேர்வுக்கு வழிகாட்டி. மிகையும் குறையும் ஆகிய இவையே நோயின் தன்மையை அறியவும் உரிய மருந்தை தேர்வு செய்யவும் உதவுகின்றன என்பதாம்.

நோயின் அறிகுறியும், மருந்தின் அறிகுறியும் ஒத்திருத்தல் வேண்டும். எதிர்நிலை மருத்துவத்தின் இயலாமை, ஒத்தமருந்து ஓமியோ மருந்து, ஓமியோபதியின் மெய்ம்மை செயற்கை நோய் அறிகுறிகள், இயற்கை நோய் அறிகுறிகள் இவற்றிடையே மிகுந்த ஒற்றுமை காணப்படுதல், பொருத்தமான வீறியம் – சரியான நீர்த்தல் முறை

இம் மூன்றின் அடிப்படையில் மருந்தை பயன்படுத்தும் போது நோயில் எந்த விடுபாடும் விதிவிலக்கும் இல்லாமல் முற்றிலும் குணமாகிறது. இது மாறாததும், நிலையானதும் ஆகிய உண்மையாகும்.

வலியது மெலியதை வெல்லும்

உயிராற்றலால் இயக்கப்படுவது உடம்பு. அதில் இயக்கநிலையில் உள்ளது நோய்ப் பாதிப்பு. இவ் நோய்ப்பாதிப்பை, அதற்கு ஒத்ததும், ஆயின் அதைக் காட்டிலும் வலிமையானதும் ஆகிய மருந்துப்பாதிப்பு அல்லது வேறு ஒரு நோய்ப் பாதிப்பு அல்லது வேறு ஒரு நோய்ப்பாதிப்பு நிலையாக அழித்துவிடுகிறது என்பதே இங்கு ஓமியோபதி விதியாகக் கூறப்பட்டது. இதுவே இயற்கைக்குப் பொருந்துவதும், உண்மையான குணப்படுத்தும் விதியும் ஆகும் என்பதும் உடன் உரைக்கப்பட்டன.

மருந்தாற்றலின் வலிமை
  • இயற்கை நோயை வெல்லும் செயற்கை நோய்
  • கட்டுப்பாட்டிற்குள் உள்ள செயற்கை நோய்

மருந்தின் அளவும் வீறியத்தின் பயன்பாடும் நமது கட்டுப்பாட்டிற்குள் உள்ளன. எனவே மருந்தாற்றலை கட்டுப்படுத் முடிகிறது. ஆற்றல் மிக்க மருந்தாற்றல் இயற்கையாய்ப் பற்றிக் கொள்ளும் நோயைக் காட்டிலும் மேம்பட்டிருப்பதால் அஃது இயற்கை நோயை நீக்கி குணப்படுத்துகிறது.

நோய்ப்பகை எல்லோரையும் பற்றுவதில்லை

சுற்றிச் சூழ்ந்துள்ள அந் நச்சுச் சார்பின் தாக்கத்திற்கு ஆட்படுமாறு உடல் உள்ளபோதே, நோய் ஆற்றல் பற்றிக் கொள்கிறது. அதனால் தான் எல்லோர்க்கும் எல்லா வேளையிலும் நோய்ப்பாதிப்பு உண்டாகாமல் சிலர் மட்டுமே நோய்க்கு ஆளாகின்றார் என்பதாம்.

செயற்கை நோய்ப்பாதிப்பு விதிவிலக்கு இல்லாதது.

மருந்துப் பொருளின் வலிமையான ஆற்றல் ஒத்த இயல்பே முதன்மையானது.

“மருத்துவர் கற்கும் பாடம் உறுதியாகவும் விரைவாகவும் நிலையாகவும் இயற்கையின் நடைமுறைக்கு ஏற்கும் வகையாலும் குணப்படுத்துவதற்கு செயற்கை நோய்ப்பாதிப்பை உண்டாக்கும் எத்தகைய மருந்தை மருந்துவர் தேர்ந்து கொள்ள வேண்டும் என்பதை இங்கு கூறப்பட்டதைக் காட்டிலும் எளிமையாகவும் உள்ள ஒப்புகின்றவாறும் கற்பிப்பதில்லை.”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *