Category Archives: Books

ஓமியோபதி மருத்துவ நெறிமுறை

organon_book.PNGநூல் : ஓமியோபதி மருத்துவ நெறிமுறை
ஆண்டு : 2013
வெளியீடு : வேங்கை பதிப்பகம், மதுரை

நூலின் சில பகுதிகள் –  தொகுத்தளித்தவர் : திரு. ஆ. கணேசன்

ஆங்கில மருத்துவத்தில் நோய்த் துன்பங்களுக்கு எதிரான மருந்துப் பொருள்கள் பயன்படுத்தப் படுகின்றன.. வரையறுக்கப்பட்ட வேறு மருத்துவக் கொள்கை எதும் அத்துறையில் இல்லாமையால், அது ஒரு நோய் தணிவிப்பு மருந்தாகவும், அவ்வப்போது மாற்றங்கள் பலவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டியதாகவும் உள்ளது. அன்றியும் பல நோய்கள் அங்குத் தீரா நோய்கள் என்று குறிக்கப்படுகின்றன.

ஓமியோபதி மருத்துவமுறையில்

  • நோய் விரைவாக நீங்குதல்
  • துன்பமில்லாமல் நீங்குதல்
  • நிலையாக நீங்குதல்
  • தீரா நோய்களும், நெடுநோய்களும் நீங்குதல்

இது போன்ற பல நன்மைகள் காணப்படுகின்றன. 

உலகப் புகழ்பெற்ற இந்நூலின் திருத்தமான தமிழ் மொழிபெயர்ப்பு இல்லாத குறையைப் போக்கியவர் பேரா. கு. பூங்காவனம்.
பேரா. மருத்துவர்.கு.பூங்காவனம் அவர்கள் தன் முன்னுரையில் ஓமியோபதி நெறிமுறை நூல் இதனை ஓமியோபதியில் பைபிள் என்பது அக்கால வழக்கு. ஆயின், இதனை ஓமியோபதிச் சட்ட நூல் என்பதே மிகவும் பொருத்தமானதாகும். சட்ட நெறிகளைப் பின் பற்றாமையும், மீறுவதும், அவற்றிற்கு மாறாக நடப்பதும் தண்டனைக்குரிய குற்றச் செயல்களாகும். இவ் ஓமியோபதிச் சட்ட நூலும் அவ்வாறே பின்பற்றுவதற்கு உரியது என்பது மட்டுமின்றி, இதில் கூறப்பட்டுள்ள நெறிமுறைகளைக் கடைப்பிடிக்காமல் யாரும் ஒமியோபதி மருத்துவத்தில் வெற்றி காணவும் இயலாது. இம் மாபெரும் மருத்துவச் சட்ட நூல், அதற்குரிய மதிப்போடு இதுவரை தமிழில் வெளிவரவில்லை. இவ்வகையில் இதுவரை எழுந்த முயற்சிகள் எல்லாம் ஓமியோபதி நெறிமுறைகளை சரிவர புரிந்து கொள்ள முடியாதவாறு அவற்றின்றும் சேய்மைப் படுத்துவவாகவே அமைந்துவிட்டன.

கடுநோய், நெடுநோய்

கடுநோயில் நோய் மிகுவிப்புக்காரணியாவது என அறிதல் வேண்டும். நெடுநோயில் அடிப்படைக் காரணியை அறிதல் வேண்டும். நோயாளியின் உடல்வாகு, அவர்தம் ஓழுக்கம், அறிவு நிலை, அவர்தம் தொழில், வாழ்முறைப் பழக்கங்கள், அவர்தம் குடும்ப, குமுகியல் உறவு நிலைகள், அகவை, பாலியல் செயல்பாடுகள் இவைகளையும் மருத்துவர் கருத்தில் கொள்ள வேண்டும். நோயின் உருவம் – நோய் வினைப்பாடுகள், நேர்ச்சிகள், அறிகுறிகள் ஆகியவற்றையும் கணக்கில் கொள்ள வேண்டும். நோயாளியே உணர்ந்து கூறத்தக்கவை; அருகில் உள்ள பிறர் கண்டு கூறத்தக்கவை; மருத்துவர் நோக்கி அறியத்தக்கவை. மொத்தக்குறிகள், நோய்க்குறிகளின் நீக்கமே நலத்தின் ஆக்கம்.

உயிராற்றல்

கண்ணுக்கு புலனாகாமல் ஆவி நிலையில் இருப்பது உயிராற்றல். பருப்பொருளாக உள்ள உடலே உறுப்பமைவு. உயிராற்றல் உறுப்பு அமைவை இயக்கி ஒத்திசைவுடன் நடத்துகிறது. நம்மை முழுமையான கட்டுப்பாட்டில் வைத்து ஆள்கிறது. உடலை இயக்கும் உயிராற்றல் – நோயுற்ற போதும், நோய் நீங்கிய காலத்தின் போதும் உடலுக்கு உயிரூட்டி செயல்படுத்துகிறது.
உயிராற்றலின் பாதிப்பே நோய், உயிராற்றலின் மீட்சியே நலம்

அறிகுறிகளே நோயின் வெளிப்பாடு

உயிராற்றலுக்கும் உடலுக்கும் உள்ள தொடர்பு – உயிராற்றலையும், உறுப்பமைவையும் ஒன்றிலிருந்து ஒன்றை பிரிக்க முடியாதவாறு ஒன்றிப் பிணைந்துள்ளவை என்பதை இங்கு தெளிவாக்கினார்.

குடம்பை தனித்தொழியப் புண் பறந்தற்றே
உடம்போடு உயிரிடை நட்பு.

ஆனிமான் கூறிய விளக்கமும் உடன் வைத்து எண்ணத்தக்கவை.

நோயை முழுமையாய்ப் போக்குதல்

மொத்தக் குறிகளே மருந்துக் தேர்வுக்கு வழிகாட்டி. மிகையும் குறையும் ஆகிய இவையே நோயின் தன்மையை அறியவும் உரிய மருந்தை தேர்வு செய்யவும் உதவுகின்றன என்பதாம்.

நோயின் அறிகுறியும், மருந்தின் அறிகுறியும் ஒத்திருத்தல் வேண்டும். எதிர்நிலை மருத்துவத்தின் இயலாமை, ஒத்தமருந்து ஓமியோ மருந்து, ஓமியோபதியின் மெய்ம்மை செயற்கை நோய் அறிகுறிகள், இயற்கை நோய் அறிகுறிகள் இவற்றிடையே மிகுந்த ஒற்றுமை காணப்படுதல், பொருத்தமான வீறியம் – சரியான நீர்த்தல் முறை

இம் மூன்றின் அடிப்படையில் மருந்தை பயன்படுத்தும் போது நோயில் எந்த விடுபாடும் விதிவிலக்கும் இல்லாமல் முற்றிலும் குணமாகிறது. இது மாறாததும், நிலையானதும் ஆகிய உண்மையாகும்.

வலியது மெலியதை வெல்லும்

உயிராற்றலால் இயக்கப்படுவது உடம்பு. அதில் இயக்கநிலையில் உள்ளது நோய்ப் பாதிப்பு. இவ் நோய்ப்பாதிப்பை, அதற்கு ஒத்ததும், ஆயின் அதைக் காட்டிலும் வலிமையானதும் ஆகிய மருந்துப்பாதிப்பு அல்லது வேறு ஒரு நோய்ப் பாதிப்பு அல்லது வேறு ஒரு நோய்ப்பாதிப்பு நிலையாக அழித்துவிடுகிறது என்பதே இங்கு ஓமியோபதி விதியாகக் கூறப்பட்டது. இதுவே இயற்கைக்குப் பொருந்துவதும், உண்மையான குணப்படுத்தும் விதியும் ஆகும் என்பதும் உடன் உரைக்கப்பட்டன.

மருந்தாற்றலின் வலிமை
  • இயற்கை நோயை வெல்லும் செயற்கை நோய்
  • கட்டுப்பாட்டிற்குள் உள்ள செயற்கை நோய்

மருந்தின் அளவும் வீறியத்தின் பயன்பாடும் நமது கட்டுப்பாட்டிற்குள் உள்ளன. எனவே மருந்தாற்றலை கட்டுப்படுத் முடிகிறது. ஆற்றல் மிக்க மருந்தாற்றல் இயற்கையாய்ப் பற்றிக் கொள்ளும் நோயைக் காட்டிலும் மேம்பட்டிருப்பதால் அஃது இயற்கை நோயை நீக்கி குணப்படுத்துகிறது.

நோய்ப்பகை எல்லோரையும் பற்றுவதில்லை

சுற்றிச் சூழ்ந்துள்ள அந் நச்சுச் சார்பின் தாக்கத்திற்கு ஆட்படுமாறு உடல் உள்ளபோதே, நோய் ஆற்றல் பற்றிக் கொள்கிறது. அதனால் தான் எல்லோர்க்கும் எல்லா வேளையிலும் நோய்ப்பாதிப்பு உண்டாகாமல் சிலர் மட்டுமே நோய்க்கு ஆளாகின்றார் என்பதாம்.

செயற்கை நோய்ப்பாதிப்பு விதிவிலக்கு இல்லாதது.

மருந்துப் பொருளின் வலிமையான ஆற்றல் ஒத்த இயல்பே முதன்மையானது.

“மருத்துவர் கற்கும் பாடம் உறுதியாகவும் விரைவாகவும் நிலையாகவும் இயற்கையின் நடைமுறைக்கு ஏற்கும் வகையாலும் குணப்படுத்துவதற்கு செயற்கை நோய்ப்பாதிப்பை உண்டாக்கும் எத்தகைய மருந்தை மருந்துவர் தேர்ந்து கொள்ள வேண்டும் என்பதை இங்கு கூறப்பட்டதைக் காட்டிலும் எளிமையாகவும் உள்ள ஒப்புகின்றவாறும் கற்பிப்பதில்லை.”

மன மருத்துவமும் மலர் மருத்துவமும்

malar_book2.PNGமன மருத்துவமும் மலர் மருத்துவமும்
ஆசிரியர் : எட்வார்டு பாச்
தமிழாக்கம்: மரு. கு. பூங்காவனம்
வெளியீடு : வேங்கை பதிப்பகம்,
80 ஏ, மேலமாசிவீதி, மதுரை – 1
94439 62521

நூலின் சில பகுதிகள் தொகுத்தளித்தவர் : திருமதி. கீதாவாணி
நோயும் மருந்தும்

நோயின் தோற்றத்திற் காரணத்திலிருந்து மக்களின் எண்ணத்தைத் திசை திருப்பி, அதனால் நோயை நன்கு தாக்கும் முறைகளிலிருந்தும் திசை திருப்பிவிட்டது.

நோயை உடல் அளவில் தோற்றமுடையதாகக் காட்டியதால் நோயிலிருந்து உண்மையாக குணமடைய முடியாது.

நோய்க்காரணம்:

ஆதனுக்கும் (ஆன்மா) மனத்திற்கும் உள்ள முரண்பாட்டின் விளைவே நோய்.

அடிப்படை நெறிமுறைகள்

நோயின் இயல்பைப் புரிந்து கொள்வதற்குச் சில அடிப்படை உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவை:

  1. அதன் இயல்பு
  2. ஆளுமை வடிவின் இயல்பு,
  3. மண்ணுல வாழ்வு
  4. ஒத்திசைவும் – முரண்பாடும்
  5. ஒருமைப்பாடு.

நம்முடைய பிழைபாடுகள் :

  1. நம்முடைய ஆதனுக்கும் நம் ஆளுமைவடிவுக்கும் இடையே உண்டாகும் வேறுபாடு
  2. ஒருமைப்பாட்டுக்கு எதிரான கரிசு (பாவ)ச் செயலாகப் பிறருக்குச் செய்யப்படும் கொடுமைகள் அல்லது தவறுகள்

மேலும் இரண்டு பெருந்தவறுகளும் காணப்படுகின்றன அவை :

  1. நம் ஆதன் அறிவுறுத்துவதை ஏற்றுக் கீழ்படியத் தவறுதல்
  2. ஒருமைபாட்டுக்கு எதிராகச் செயல்படுதல் – என்பன
உண்மையான நோய்கள்

நோயின் தொடக்க நிலை – தன் விருப்பு, தொடக்க நிலையில் உண்மையான நோய்களாக உள்ளவை. அ) செருக்கு, ஆ) கொடுமை, இ) வெறுப்பு, ஈ) தன் விருப்பு, உ) அறியாமை ஊ) நிலையின்மை, எ) பேராசை என்னும் குறைபாடுகளே.

எண்ணிப் பார்த்தால், இவை ஒவ்வொன்றும் ஒருமைப்பாட்டுக்குப் புறம்பானவையாக உள்ளவை என அறியலாம். இக் குறைபாடுகளே உண்மையான நோய்கள் ஆகும். இவை தவறானவை என உணரும் நிலைக்கு நாம் வளர்ச்சி யடைந்த பின்னும் இவை நம்மிடமிருந்து நீங்காமல் தூண்டப்பட்டுத் தொடர்வதனால் நம் உடலுக்கு ஊறுபடுத்தும் விளைவுகளாகிய பிணிகள் உண்டாகியுள்ளன.

நோய்கள் நீங்கும் வழி

நோயிலிருந்து முழுமையாய்க் குணமடைய வேண்டுமாயின், குணமாக்கும் மருத்துவக் கலைகளுள் சிறந்த ஒன்றைத் தேர்ந்து அதன் மூலம் நமது உடல் வழித் தொல்லையைப் போக்க முற்படுவதுடன், நம்முடைய இயல்பில் உள்ள பிழையைத் தெரிந்து கொண்டு நம்மால் முடிந்தவரை முயன்று அப்பிழையைப் போக்கிக் கொள்ளவும் முற்படுதல் வேண்டும்.

மருத்துவரும் மருத்துவக் கலையும்

இவ் அண்டத்தின் மாற்றம் இல்லாத விதிகளின் உண்மையை மாந்த இனம் புரிந்து கொண்டும், பணிவோடும் கீழ்ப்படிதலோடும் அவ்விதிகளை ஏற்று நடந்தும், அதனால் ஆதனுக்கும் தனக்கும் இடையே அமைதியை உண்டாக்கியும்; வாழ்வில் உண்மையான உவகையும் மகிழ்ச்சியையும் ஈட்டிக் கொள்வதையும் பொருத்தே நோய்களை ஒழிக்க இயலும். துயர்உறும் நோயாளி அவ்வுண்மை பற்றிய அறிவைப் பெற உதவுவதும், ஒத்திசைவு உண்டாவதற்கான வழிகளைச் சுட்டிக் காட்டுவதும்; அந் நோயாளியிடத்தில் உள்ளதாகிய எல்லாவற்றையும் வெல்லும் ஆற்றல் கொண்ட அத் தெய்வீகத்தை அவர் நம்புவதற்கு ஊக்குவிப்பதும், ஆளுமை வடிவையும் உடலையும் குணப்படுத்தி ஒத்திசைவு உண்டாக்க வல்லததாகிய மருந்து பொருளை அவருக்குக் கொடுப்பதும் ஆகிய இவை மருத்துவர்தம் பங்காகும்.

நமக்கு நாமே உதவிக் கொள்ளுதல்

முரண்பாடு இல்லாத ஆளுமை வடிவமே நோய்தடுப்பு ஆதலால் நோய் நம்மைத் தாக்குவதற்கு அரிதாகுமாறும் இயலாதவாறும் நாம் நம் மனத்தையும் உடலையும் ஒத்திசைவுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

தியானம், நம் குறைபாட்டுக்கு எதிரான நல்லியல்புகளைப் படிப்படியாய்ப் பெருக்கிக் கொள்ளுதல், சலிப்புணர்வை வளர்த்தல், உடலோம்பல், மற்றும் அகத்தூய்மை.

வெற்றிக்கு வழி

நோயை வெல்வதற்கு நாம் பின்கண்டவற்றை முதன்மையாய்ச் சார்ந்திருக்கலாம் அவை :

  1. நம் இயல்பிலேயே உள்ளதாகிய தெய்வீகத்தை வளர்ந்த அதனால் பிழைபாட்டைப் போக்குவதற்கு நமக்குள்ள வலிமையை உணர்தல்
  2. ஆதனுக்கும் ஆளுமை வடிவுக்கும் உள்ள ஒத்திசைவற்ற நிலையே நோய்க்கான அடிப்படைக் காரணம் என்னும் அறிவைப் பெறுதல்
  3. அத்தகைய தவற்றுக்கு எதிரான நல்லியல்பை வளர்த்துக் கொள்வதால் அத்தவற்றைப் போக்குதல்.
மலர் மருத்துவம்
மேதை எட்வர்டு பாச் அவர்களின் முன்னுரை :

நினைவுள்ளவரை மாந்த இனத்துக்குக் கிடைத்துள்ள முழுச்சீர்மையான மருத்துவ முறை இதுவேயாகும். இதற்கு நோய்களைக் குணமாக்கும் ஆற்றல் இருப்பதோடு வீடுகளில் பயன்படுத்தத் தக்கவாறு எளிமையானதாகவும் இஃது உள்ளது.

தெய்வீக அருளால் நமக்குக் காட்டப்பட்டுள்ள இம் மருத்துவமுறை, நமது அச்சம், கவலை, மனக்கவற்சி முதலான உணர்வுகளே நோய்கள் நம்மைத் தாக்குவதற்கு வழிவகுக்கின்றன என்பதைக் காட்டுகிறது. நம்முடைய அச்சம், வருத்தம், கவலை, முதலானவற்றுக்குப் பண்டுவம் பார்ப்பதால் நம்முடைய நோய் துன்பங்களிலிருந்து நமக்கு விடுதலை கிடைப்பதோடு, எல்லாவற்றையும் படைத்தவரின் அருளால் நமக்குக் கிடைத்துள்ள இம்மூலிகைகள் நம்முடைய அச்சத்தையும் கவலையையும் போக்கி நமக்கு மேலும் மகிழ்ச்சியும் நன்மையும் கிடைக்குமாறு செய்கின்றன.

38 மருந்துகளும் பின்கண்டவாறு 7 தலைப்புகளில் சுட்டப்படுகின்றன – ஏழு வகை மன நிலையினர்.

  1. அச்ச உணர்வு கொண்டவர்கள்
    1. இராக்ரோசு
    2. மிமுலசு
    3. செரிபிளம்
    4. ஆசுபென்
    5. இரெட் செசுட்நட
  2. உறுதியின்மையால் துன்புறுவோர்
    1. செராட்டோ
    2. கிளராந்தசு
    3. சென்சன்
    4. கோர்சு
    5. ஆர்ன்பீம்
    6. வைல்டு ஓட்
  3. சூழலுக்கேற்பப் போதுமான ஆர்வம் இல்லாதவர்
    1. கிளமாட்டிசு
    2. அனிசக்கிள்
    3. வைல்டு ரோசு
    4. ஆலிவ்,
    5. வைட்செசுட்நட்
    6. மசுடர்டு
    7. செசுட் நட் பட்
  4. தனிமை உணர்வினர்
    1. வாட்டர் வயலட்
    2. இம்பேசன்சு
    3. ஈதர்
  5.  எண்ணங்கள், தாக்கங்கள் பற்றிய மிக்குணர்வு உடையோர்
    1. அக்ரிமொனி
    2. செண்டாரி
    3. வால்நட்
    4. ஆல்லி
  • நம்பிக்கை இழப்பு அல்லது வருத்தத்தில் தோய்ந்திருப்போர்
    1. 1) இலார்சு
    2. பைன்
    3. எல்ம்
    4. சுவீட் செசுட்நட்
    5. இசுடார் ஆஃப் பெத்லேகம்
    6. வில்லோ
    7. ஓக்
    8. கிராப் ஆப்பிள் 
  • பிறர் நலத்தில் மிகவும் அக்கறை காட்டுவோர்
    1. சிகோரி
    2. வெர்வைன்
    3. வைன்
    4. பீச்
    5. இராக் வாட்டர்
  • எல்லாவற்றையும் உண்டாக்கிய பேரருள் கொண்ட படைப்பாளர், நம் மீது கொண்ட அன்பினால், வயல் வெளிகளில் மூலிகைகளை ஆக்கிக் கொடுத்து அவர் நம்மை நலப்படுத்தவதற்காக நம் நெஞ்சில் உவகையும் நன்றிப் பெருக்கும் கொண்டவர்களாய் இருப்போமாக.

    Healing with Flower Medicine

    malar_book4.PNG Healing with Flower Medicine
    By Dr. K. Poongavanam
    Price Rs.120
    Published by : Dr.Bach Healing Foundation, Bangalore

    The following is a review of the book that appeared in The New Indian Express

    Flower  Medicine  for  holistic  healing 

    (Click on this for the original article)

                    Inspired by Dr.Edward Bach. A bacteriologist. Pathologist and homeopathic physician, the book  Healing wih Flower Medicine by  Dr. K.Poongavanam is a lucid collation of remedies for healing both spiritual and emotional conditions.

    The author has come out with a detailed Materia Medica Flora that lists out the flower with its botanical name,  matchings with the type of person or situation, the method of usage and ultimately, he has drawn a complete sketch of each flower remedy.  However, the author has specifically mentioned that the original source books for such remedies must be read like the “The twelve Healers” by   Dr. Edward Bach so as to understand and build a wider Materia Medica.

    Way back in the 1930s, Dr.Bach had opined that the dew found on floral petals retained healing properties of a particular  plant.  Although often labelled as homeopathic medicines as they are used by diluting in water,  strictly speaking, Dr.Bach’s remedies were truly not that as they were not following the basic tenets of Homeopathy.  Bach said, “Illnesses  were as a result of a conflict between the purposes of the soul and the personality’s actions and outlook.

    The internal war lead to negative mood swings and to energy blocking, which caused a lack of harmony, thus, leading to physical diseases.”

    Bach was satisfied with the method he had evolved either by boiling or nurturing in sunlight, because of its simplicity, and because it involved a process of combination of the four elements;  the earth to nurture the plant, the air from which it feeds, the sun of fire to enable it to impart its power, and water to collect and be enriched with its beneficent magnetic  healing.

    Bach flower remedies are not dependent on the theory of sucessive dilutions, and are not based on the Law of Similars of Homeopathy.

    The Bach remedies, unlike are all derived from non-toxic substances, with the idea that a “positive energy” can redirect or neurtalize “negative energy”.

    “To understand the suffering human mind and to make use of the suitable flower remedy, we need to follow different strateges.  Studying mind in its opposite condition helps towards this end,” says Dr.Poongavanam.  He further says that to make best use of flower remedies, there is a need to adopt some techniques which will help us to understand, remember and recall those symptoms which are given against each of them.

    For instance, Agrimony, it is brooding, restlessness, grieving silently, etc and for Clamatis, it is dreamy, drowsy, day dreaming, etc.   The book has highlighted seven groups as Dr. Bach has placed all his 38 remedies in seven groups.  They have been clubbed in accordance with their affinity or otherwise, with one another.

    That way he made it possible ot comprehend them comparing and differentiating it with one another.  The seven groups, with their leading one line symptoms have been classified as:  fear, instability, disinterest, loneliness, oversensitive, despondencey and over care for welfare of others.

    Apart from this, there is a combination of five flower remedies which is considered a saviour in the real sense.

    The rescue remedy which is the best known flower remedy is the combination of an equal amount each of Rock Rose, Impatiens, Clematis, Star of Bethlehem and Cherry Plum remedies.

    The product is aimed at treating burns, cuts, confusions, heamorrhages, stress, anxiety, and panic attacks, especially in emergencies.  The author concludes that this is remedy which if given at the right time can save life and definitely perform the function of a first aid remedy, in any condition.

    A useful book, if properly understood and matched with the right person and group, however, do not try out this remedy on your own without expert help.

     _  Meera Bhardwaj
    21, August 2012  –  CITY   EXPRESS  (THE  NEW INDIAN  EXPRESS)

    A Review by R. Anandkumar, Advocate

        It is a difficult task ot select some medicine amongst the 38 medicines and it is also against the principles of Organon (Philosophy of Homeopathy) and write excerpts from The Book, “Healing with Flower Medicine.

         A practioner cannot have a liking or dislike to a particular medicine.  Hence all the 38 medicines play a vital role.

         For a Cherry plum type person, Willow will be of no consequence and vice – versa.

         However, to complete the assignment, I have selected two medicines.

         The first being “Holly” and the other “Rock Water

    Holly:

       It represents Holly Love or Divine guidance.  The personality follows the “Higher Self”, the superior or most perfect form of one self. The basic principle of “HEAL THY SELF” (Pure Philosophical work on Healing by  Dr. Edward Bach)

         Lord Buddha can be quoted as a classic example of a Holly type personality and Angulimala can be quoted as a classic example of a negative quality of Holly type.  Personality, who after conversion developed the opposite virtue and became positive character of Holly type.

    Rock Water:

       Self denial and self martyrdom being some of the qualities of Rock Water, makes a Rock Water character a harmless person in the society.

         These two medicines are nearer to the principle of Heal Thyself.

         To conclude these two Flower medicines are the primary medicine nearer to the philosophy of “Heal Thy Self”.

    நமக்கு நாமே நலம் காண்போம்

    namakku_book.PNGநமக்கு நாமே நலம் காண்போம் – மரு.கு.பூங்காவனம்;
    பக்.136 ; ரூ.85;
    தமிழ்மண் பதிப்பகம்;
    சென்னை – 17;

     

    தினமணி நாளிதழில் வெளியான நூல் மதிப்பீடு பின்வறுமாறு

    நமக்கு ஏற்படும் உடல், மன நோய்களை வாராமல் தடுக்கவும், வந்தபின் நலமாக்கவும் என்ன செய்ய வேண்டும என்பதைக் கூறும் நூல், யோகப் பயிற்சிகள், மனதை சமநிலை தவறாது பாதுகாப்பது உடலுக்குத் தேவையான பொருத்தமான உணவு போன்றவற்றால் நோய்களைத் தவிர்க்க முடியும் என்ற அடிப்படையில் எழுதப்பட்டுள்ள விரிவான நூல். உடல், மனநலம் பேணுவது தொடர்பாக திருவள்ளுவர் கூறிய கருத்துகளையும் நூல் தொகுத்துக் கொடுத்துள்ளது. உடல் நலனில் அக்கறையுள்ள அனைவருடைய கைகளிலும் இருக்க வேண்டிய நூல்.

    தினமணி – திங்கள்கிழமை, 31 மே, 2010

    நூலின் சில பகுதிகள் தொகுத்தளித்தவர் : திரு. பு.மு. இராசராசன்

    தீதும் நன்றும் பிறர்தர வாரா;

    ஒவ்வொர் உயிரின் நன்மை தீமைகள் அவ்வுயிர் இடமளிக்காமல் மற்றவர் செய்து விடமுடியாது. இப்புத்தகத்தில் நமது நலனை நாமே போற்றி பாதுகாத்துக் கொள்வதுடன் உயர் ஆதனின் (Higer Self) தொடர்புடன் நாம் நமது வாழ்வின் உச்சத்திற்கு செல்வது எப்படி என்றும் மரு. பூங்காவனம் ஐயா அழகுற எடுத்து இயம்பியுள்ளார். ஆளுமை (Personality) ஆடாத மனம் அடங்கி உயர் ஆதனுடன் இயைந்து நடப்பின் பிணி போம், துன்பம் போம், வல்வினை போம்.

    இதை டேவிட் பாச் அழகாக கூறுவர்:

    “நாம் நமது மெய்யான இயற்கை தன்மையில் இயைந்து இசைபட உள்ளவரையில் நம்மால் பிணியுற்று வாழ இயலாது” – டேவிட் பாச்.

    உணவுக்கு முன்னும், பின்னும் ஏன்? உணவாகவே மருந்து கழிக்கின்ற இக் கணிணி காலத்தில் மருந்து நீக்கி, பிணி நீக்கி, நல் உடல் மற்றும் உள நலத்துடன் வாழ வழி கூறும் ‘நன்னூல்’ “நமக்கு நாமே நலம் காண்போம்” என்ற இப் பொன்னூல் இஃது,

    1. நடைமுறை ஓகம்
    2. நமக்கு நாமே மருத்துவம்
    3. மருந்தென வேண்டாவாம்

    என்று மூன்று அங்கங்களாக பாங்குற பகுக்கப்பட்டு இன்புற்று வாழ வழி வகுக்கின்றது.

    I. நடைமுறை ஓகம் (Yoga):

    ஓகத்தில் கரை கண்டவரும் அல்லது நல்லாசிரியர் துணை கொண்டும்தான் ஓகம் பயிற்சி செய்ய வேண்டும் என்ற நிலைஇன்றி, எளியவரும், தமிழறிவு உடையவரும் தினமும் சிறிது நேரம் இன்னுடல் ஓம்புதல் வேண்டி எளிய முறையில் பயிற்சி செய்யும் வண்ணம் ஓக அடிப்படைகளும், மூச்சுப்பயிற்சியும், எளிய வகை நடைமுறையிலான ஒக உடல்பயிற்சிகளும் இனிதாக விளக்கப்பட்டுள்ளன. இஃது,

    • நடைமுறை ஓக முயற்சி
    • செய்ம்முறை விளக்கங்கள்
    • தமிழர் சொத்து

    என்று மூன்றாய் விளக்குகின்றார்.

    தமிழர் சொத்து என்ற பகுதியில் மூன்று அல்லது நான்கு ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பாகவே ‘ஓகநூல்’ எனும் மூலநூல் இருந்ததென்றும், கடல்கோள்களால் அழிந்து பட்டாலும் மக்களின் வழிவழித் தொடர்ச்சியான வாழ்வினால் ஓகமுறை பற்றிய நூல்கள் பின்னர் தோன்றியுள்ளன எனவும் இதைப் போல் தமிழருடைமையான பலவும திரிந்தும் சிதைந்தும், வழி மாறியும் போயின என்றும் இதனால் தமிழர் சொத்து, சொத்தையாய் போனது எனவும் விளக்கியுள்ளார்.

    II. நமக்கு நாமே மருத்துவர்

    இஃது ஓர் மெய்யியல் சார்ந்த பகுதி. நமது அறிவர் (சித்தர்) கூற்றான “உயிரார் அழிந்தால் உடம்பார் அழிவர், உடலார் அழிந்தால் உயிரார் அழிவர்” என்பதை தழுவி “நம்மை நாமே எங்ஙனம் நலமாய், உடலையும் மனத்தையும் நலமாய் பேணி வளர்ப்பது என மெய்யியலிலும், மருத்துவத்திலும் வளர்ந்து வெற்றிகண்ட மேதையான ‘எட்வர்டு பாச் (1886 – 1936) அவர்களின் வழியில் விளக்குகின்றார் ஆசிரியர். இதை ஆசிரியர் 82 வினா விடைகளாக எளியோர்க்கும் எளிதில் விளங்கும் வண்ணம் சிறுசிறு பகுதிகளாக பிரித்து விளக்கியுள்ளார்.

    இங்கு ஒரு சிறிய பகுதியினை சுட்ட விரும்புகின்றேன். (வினா – 3) மூல நூலில் உன்னை நீயே குணப்படுத்துக (Heal Thyself) தலைப்பின்றி எட்டு பகுதிகளாக வற்புறுத்தி கூறப்பட்டுள்ளவை வருமாறு.

    1. நோயும் மருத்துவமும்
    2. ஐந்து அடிப்படை மெய்யியல் கூறுகள்
    3. உண்மையான நோய்பற்றிய விளக்கம்
    4. நோய்களை மருந்தன்றி போக்கும் வழிமுறைகள்
    5. மாந்த உறவு நிலை பாதிப்புகள்
    6. மருத்துவர் மருத்துவக் கலை பற்றிய கருத்துக்கள்
    7. நடைமுறை கடைபிடிப்புக்கள்
    8. நோய், துன்பம் ஆகிய இவற்றை வெற்றி காணும் வழிகள்
    என்பவையாகும்.

    மேலும் தொடக்கநிலை நோய்களாக பின்வரும் ஏழுவகை மனநிலைகளை குறிக்கின்றார் (வினா – 23)

    1. செருக்கு
    2. கொடுமை
    3. வெறுப்பு
    4. தன்விருப்பு

    5. அறியாமை
    6. நிலையின்மை
    7. பேராசை

    இவற்றுள் தன்விருப்பு (Self Love) நோய் மூலமாக குறிக்கப்பட்டு நடுநாயகமாய் வீற்றிருப்பது கவனிக்கத்தக்கது.

    III. மருந்தென வேண்டாவாம்

    இந்த பகுதியில் அனைத்து அறங்களையும் அறிவாகவும், செறிவாகவும், தௌ¤வாகவும், ‘அக்காலத்திற்கும், மிக மிக வளர்ந்ததாய் பறைசாற்றும் இக்காலத்திற்கும் மட்டும் இன்றி நாமறிய வருங்காலத்திற்கும் பொருந்தும் வகையில் 10 பாக்களாய் 133 அதிகாரங்களில் அறம், பொருள், இன்பம் என அனைத்தையும் ‘கடுகை துளைத்து ஏழ் கடலை புகுத்தி குறுகத் தணித்த குறள்’ என புகழப்பட்ட குறட்பாக்களை படைத்த திருவள்ளுவப் பெருந்தகையின் இரத்தினங்களில் இருந்து ஆசிரியர் தெரிந்து கண்ட மருத்துவ கொள்கைகளாய் பின்கண்டவற்றை வரிசைபடுத்தி அவற்றை விளக்குகின்றார்.

    1. பொதுமக்கள் நலவாழ்வு (பொது சுகாதாரம் – Public Health)
    2. முற்காப்பும் நோய்தடுப்பும் (Prophylactic and Prevention)
    3. நோயை முளையிற் கிள்ளுதல்
    4. நோய் முதல் நாடுதல்
    5. மனச்செம்மை மருத்துவம்
    6. உடல் இயக்கம்
    7. மருத்துவ நெறிமுறைகள்
    8. வாழ்நாள் நீட்டிப்பு
    9. பொருந்தும் உணவு
    10. உணவு மருத்துவம் அல்லது மருந்தில்லா மருத்துவம்

    இவைகளிலும் இறுதியில் கூறப்பட்டுள்ள பொருந்தும் உணவும், மருந்தில்லா மருத்துவமும் தனி சிறப்பு வாய்ந்தவையாகும்.

    இணைப்பாக கலைசொற்பட்டியலும், ஓக நிலைகளின் விளக்க புகைப்படங்களும் உள்ளமை சுடர்விளக்கின் தூண்டுகோல் போல் அமைந்துள்ளது.

    பன்னிரு திரளை உப்பு மருந்துகள்

    thiralai_book.PNGபன்னிரு திரளை உப்பு மருந்துகள் – மரு.கு.பூங்காவனம்;
    பக்.112; ரூ.70;
    தமிழ்மண் பதிப்பகம்,
    சென்னை – 17

    தினமணி நாளிதழில் வெளியான நூல் மதிப்பீடு கீழே காணவும்

    நமது உடல் திசுக்ளால் ஆனது. திசுக்கள் உருவாவதில் மெக்னீசியம், பாஸ்பரஸ், கால்சியம் புளோரைடு, கால்சியம் பாஸ்பரஸ், நேட்ரம் சல்பூரிகம் போன்ற பல்வேறு தாது உப்புப் பொருட்களுக்கு பங்குண்டு. மனித உடலில் ஏற்படும் நோய்களுக்கு மருந்தாக இத் தாது உப்புகளைப் பயன்படுத்தும் புதிய மருந்து வழிமுறையே திரளை உப்பு மருந்துகள். ஹோமியோபதி மருத்துவத்திலும் இந்த மருந்துகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மருத்துவத்தைப் பற்றி அறிமுகம் செய்யும் நூல். இந்த மருந்துகளைப் பற்றியும் இந்த மருந்துகளால் குணமாகும் நோய்களைப் பற்றியும் விரிவாகக் கூறும் நூல், பல்வேறு மருத்துவமுறைகளைப் பற்றித் தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும் நூல்.

    தினமணி – திங்கள்கிழமை, 24 மே, 2010

    நூலின் சில பகுதிகள் தொகுத்தளித்தவர் : திருமதி. எச். உமா

    பாவாணர் தம் கொள்கை வழி நின்று தமிழ் – தமிழர் காப்புக்கும், வளர்ச்சிக்கும் மேம்பாட்டிற்கும் அரும்பாடுபட்டு வரும் தமிழ் அறிஞர் மரு.கு.பூங்காவனம் அவர்கள் எழுதிய நூல் “பன்னிரு திரளை உப்பு மருந்துகள்”.

    இதனைப் படித்திட வாய்ப்புப் பெறும் நாம் – நாமும் பயன்பெற்று பிறரும் பயனடைய உதவுவதைச் சமுதாயக் கடமையாகக் கொள்வதே நோயற்ற சமுதாயத்திற்கு நாம் செய்யக்கூடிய கைம்மாறு ஆகும்.

    அந் நூலின் சில மணித்துளிகள்
    முன்னுரை:

    நோயின் சுவடு ஏதும் இல்லாமல் முற்றிலும் ஒழிக்கின்ற ஓமியோபதி மருத்துவ முறைக்கும், ஏனைய பிற மருத்துவ முறைகளுக்கும் இடைப்பட்டதாகவும் குறிக்கத்தக்க குறையேதும் இல்லாததாகவும் அமைந்திருப்பது திரளை உப்பு மருத்துவம் ஆகும்.
    ஓமியோபதி மருத்துவர்களுக்குத் துணை மருத்துவமுறையாக உள்ள இம் மருத்துவம், அந் நிலையிலேயே நில்லாமல் வீட்டு மருத்துவ முறையாகவும் பயன்படுதல் வேண்டும்.

    குறிப்புகள்:

    மருத்துவ மேதை சுசுலர் – ஓமியோபதி மருத்துவ முறை கண்டுபிடிப்பாளர் மாமேதை சாமுவேல் ஆனிமான் தோன்றிய அதே செருமன் நாட்டில் ஒல்டன்பர்க்கு என்னுமிடத்தில் தோன்றியவர் மருத்துவர் மெட்.டபிள்யூ. எச்.சுசுலர் என்பவர் ஆவர்.
    அவர் மரபுசார் மருத்துவ கல்விக்குப் பின்னர் ஓமியோபதி மருத்துவ முறைக்கு மாறியவர். இவரே பன்னிரு திரளை உப்பு மருத்துவ முறையை உருவாக்கித் தந்தவர். இதனை அவர் உயிர் வேதியியல் மருத்துவமுறை எனக் குறித்தார்.

    உயிரணுக்களும் குருதியும்

    நமது உடம்பில் உள்ள எல்லா உயிரணுக்களுக்கும் அவற்றிற்கேற்ற ஊட்டத்தை எடுத்துச் சென்று வழங்குவது குருதி.
    குருதியை ஆராய்ந்து அதன் உள்ளடக்கப் பொருள்கள் வரையறுத்துக் கூறப்பட்டுள்ளன. குருதியில் உள்ளவை உறுப்புச் சார்பின் (Organic), உறுப்புச் சார்பற்றன (Inorganic) என இரண்டாகப் பகுக்கப் பெற்றன. அவை

    உறுப்புச் சார்பானவை 
    1. கொழுப்பு
    2. சர்க்கரை
    3. வெண்புரதம்

    உறுப்புச் சார்பற்றவை
    1. நீர்
    2. சோடியம் குளோரைடு
    3. கால்சியம் புளோரைடு
    4. சிலிசிக் ஆசிடு
    5. அயம்
    6. கால்சியம்
    7. மக்னீசியம்
    8. சோடியம்
    9. பொட்டாசியம

    உறுப்புச் சார்பற்றவற்றுள் நீரைத் தவிர எஞ்சியவை அவற்றுள் கூட்டுப் பொருள்களுடன் பின் வருமாறு பன்னிரெண்டாக உள்ளன.

    1. கல்காரியா ஃபுளோரிகம்
    2. கல்காரியா பாசுபாரிகம்
    3. கல்காரியா சல்பூரிகம்
    4. பெரம் பாசுபாரிகம்
    5. காலி மூரியாடிகம்
    6. காலி பாசுபாரிகம்
    7. காலி சல்பூரிகம்
    8. மக்னீசியம் பாசுபாரிகம்
    9. நேட்ரம் மூரியாடிகம்
    10. நேட்ரம் பாசுபாரிகம்
    11. நேட்ரம் சல்பூரிகம்
    12. சைலீசியா

    இக் குருதிப் பொருள்களில் ஐந்து விழுக்காட்டளவில் உள்ள உறுப்புச் சார்பிலாப் பொருள்கள் இன்றேல் ஏனையவை இயக்கமற்ற தேக்கநிலையை அடைந்தும் கட்டுக் குலைந்தும் அழிந்துபடும். அவ்வாறு அவை கெடாமல் கட்டிக் காத்தும் அவற்றை இயக்கியும் காப்பவை ஐந்து விழுக்காடு உறுப்புச் சார்பிலாப் பொருள்களேயாதலால் அவற்றின் சீர்மையும் சமநிலையும் பாதிக்கப்படின் நோய்த் துன்பங்கள் உண்டாகும் என்பதும் வெளிப்படையாகிறது.

    திரளை உப்பு மருந்துகள்

    இப் பன்னிரெண்டு மருந்துகளும் திரளை உப்பு மருத்துவம், ஓமியோபதி மருத்துவம் ஆகிய இரண்டு முறைகளிலும் பயன்படுத்தப் படுகின்றன.

    இத்திரளை உப்பு மருந்துகளைப் பயன்படுத்தியவர்கள் ஓமியோபதி மருத்துவர்களாகவும் இருந்தனர். அவர்கள் ஓமியோ, திரளை உப்பு மருந்துகளைத் தேவைக்கேற்பப் பயன்படுத்தினர்.

    1. கல்காரியா ஃபுளோரிகம் – நெகிழ்வுத் திரளை அணுக்களுக்குரியது

    2. கல்காரியா பாசுபாரிகம் – எலும்பு அணுக்களுக்கு உரியது

    3. கல்காரியா சல்பூரிகம் – சீழ்கட்டும் நிலைகளுக்கு பயன்படுகிறது

    4. பெரம் பாசுபாரிகம் – குருதி அணுக்கள், தசை அணுக்கள்
    முதலானவற்றின் உட்பொருளாக காணப்படுகிறது

    5. காலி மூரியாடிகம் – நரம்பு அணுக்களில் காணப்படும் உறுப்புச் சார்பிலாப் பொருள் ஆகிய மெக்னீசியம் பாசுபாரிகம், பொட்டாசியம் பாசுபாரிகம், கால்சிய்ம் என்னும் இவை பொட்டாசியம் குளோரைடு
    என்பதோடு சேர்ந்து தசையணுக்களில் உள்ளன.

    6. காலி பாசுபாரிகம் – மூளை, நரம்புகள், தசைகள், குருதி அணுக்கள், ஆகியவற்றில் உள்ளது. மூளை அசதி, மூளையில் அடிபடுவதால் உண்டாகும் பாதிப்புக்கு இது மருந்தாகக் கூடும்.

    7. காலி சல்ஃபூரிகம் – மேற் புறத் தோல், தோலின் அடுக்கு ஆகியவற்றின் செயல்பாடுகளுக்குச் காலி சல்ஃபூரிகம் உரியதாகும்.

    8. மெக்னீசியம் பாசுபாரிகம் – இது தசை நரம்பு திரளைகளில் உள்ள கனிமப் பொருளாகும். இஃது எலும்புகளில் உள்ளது.

    9. நேட்ரம் மூரியாடிகம் – உணவு உப்பு உடம்பின் நீரியல் பகுதி, திண்மைப் பகுதி ஆகிய எல்லாவற்றிலும் உள்ளது.

    10. நேட்ரம் பாசுபாரிகம் – மிகையான பால் அமிலத்தால் உண்டாகும் நோய்களுக்கு இவை தேவைப்படுகின்றன.

    11. நேட்ரம் சல்பூரிகம் –  கிளாபர் உப்பு என்னும் சோடியம் சல்ஃபேட்டும், உணவு உப்பு ஆகிய சோடியம் குளோரைடும் எதிர் நிலையில்  செயலாற்றுகின்றன. உயிர் அணுக்களில் சேர்ந்த நீரைச் சோடியம் சல்ஃபேடு வெளியேற்றுகின்றது.

    12. சைலீசியா – இணைப்புத் திரளைகளிலும், தோலிலும்,
    முடியிலும் நகங்களிலும் சிலிகா அமைந்துள்ளது

    நோய் அறிகுறிகளை நன்கு அறிந்த பின்னும் அத்தகைய அறிகுறிகளைக் கொண்ட பல மருந்துகளுள்ளும் உரிய ஒரு மருந்தை வேறுபடுத்தித் தேர்ந்து கொள்வதாலேயே அந் நோயை மிக விரைந்து போக்க முடிகிறது.

    பிறந்த நாள், திருமணம் மற்றும் விழாக்காலங்களில் உறவினர் நண்பர்களுக்கு பரிசுப் பொருளாகக் கொடுக்கத்தக்க வண்ணத்தில் இந்த பதிப்பு வெளி வந்துள்ளது.

    ஓமியோபதி அறிமுகக் கட்டுரைகள்

    omiyoarimu_book.PNGஓமியோபதி அறிமுகக் கட்டுரைகள் – மரு.கு.பூங்காவனம்
    பக்.168
    ரூ.105
    தமிழ்மண் பதிப்பகம்
    சென்னை – 17
    044-24339030

    தினமணி நாளிதழில் வெளியான நூல் மதிப்பீடு கீழே காணவும்

    ஓமியோபதி மருத்துவத்தைப் பற்றி அதன் அடிப்படையில் இருந்து தெரிந்து கொள்ள விரும்புபவர்களுக்குப் பயன்படும் நூல். ஓமியோபதி மருத்துவத்தின் சிறப்பியல்புகளைப் பற்றி நூல் முழுக்கக் கூறப்பட்டுள்ளது. மனநலம் காப்பதற்கு உள்ள ஓமியோபதி மருத்துவம், விளையாட்டு வீரர்களுக்கான ஓமியோபதி மருத்துவம் அடிபட்ட காயங்கள், தீப் புண்கள், எலும்புகளில் ஏற்படும் சிதைவுகள், பூச்சி, பாம்புக்கடி, நாய்க்கடி போன்றவற்றிற்கான ஓமியோபதி மருத்துவம் பற்றிய செய்திகள் அடங்கியுள்ள நூல். நூலாசிரியர் ஓமியோபதி மருத்துவராகையால அவர் தனது சொந்த அனுபவங்க¬ளின் அடிப்படையில் இந்த நூலை எழுதியிருப்பது குறிப்பிடத்தக்கது.

    தினமணி – திங்கள்கிழமை, 17 மே, 2010

     

    ஓமியோ முரசு இதழில் வெளிவந்த நூல் மதிப்புரை

    உலகப் பொதுமறை திருக்குறள் என்று சொல்வது போல ஓமியோபதி ஒரு உலகப் பொதுச்சொத்து என அறிமுக உரையிலேயே உணர்த்தியுள்ளார் ஆசிரியர். முன்னுரையில் சீழும் சொரியும் களிம்புகளாலும் ஊசியாலும் அமுக்கப்பட்டதால், டான்சிலும், குடல்வால் அழற்சியுமாக மாறிவிட்டதுடன் எப்படி அறுவை சிகிச்சை செய்யும் நிலைக்கு கொண்டு வந்துவிட்டது என உதாரணங்களுடன் கூறி ஓமியோபதியில் நலமானதையும் விளக்கியுள்ளது பாராட்டத்தக்கது. ஓமியோபதியின் உயிராற்றல், ஒப்புமைக்கொள்கை, வீறியம் மருந்தாற்றல் அடங்கல் (ரெப்பர்டரி) என தத்துவங்களை, படிப்படியாக அழகு தமிழில் விளங்கும்படி எடுத்துரைத்துள்ளார்.
    “மாபெரும் நன்னீர் உள்ளது அதுவே ஓமியோபதிச்சுனை” என்று முத்தான வார்த்தைகளில் பொதுமக்களும் ஓமியோபதியை ஆழமாக உணர்ந்து, புரிந்து கொள்ளும் வண்ணம் வடிவமைக்கப்பட்ட நன்னூல் ஆகும். அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய நூல்.

    ஹோமியோ முரசு – பிப்ரவரி – 2013

    மகிழ்ச்சி தரும் மலர் மருத்துவம்

    malar_book.PNGமகிழ்ச்சி தரும் மலர் மருத்துவம் – மரு.கு.பூங்காவனம்
    பக்.248
    ரூ.155;
    தமிழ்மண் பதிப்பகம்
    சென்னை – 17
    044-24339030

    தினமணி நாளிதழில் வெளியான நூல் மதிப்பீடு கீழே காணவும்

    இங்கிலாந்தின் மலர் மருந்துகளைப் பற்றிய அறிமுகமாக மலர்ந்துள்ள நூல், மனித மனத்தின் பல்வேறு நிலைகளுக்கேற்ப அளிக்கப்படும் மலர் மருந்துகளைப் பற்றி விரிவாகக் கூறப்பட்டுள்ளது. இனம்புரியாத அச்சம், பிறரை அடக்கியாள நினைக்கும் மனப்பான்மை, ஊசலாடும் குணம், எதிலும் நாட்டமில்லாத மனம், எப்போதும் பேசிக் கொண்டு இருக்கும் பழக்கம. எதற்கெடுத்தாலும் எரிச்சல்படும் போக்கு, பிடிவாதம் போன்ற பல மனநிலைகளுக்குரிய மலர் மருந்துகளைப் பற்றி மிக விளக்கமாகவும் தௌ¤வாகவும் கூறியுள்ள நூல்.

    தினமணி – திங்கள்கிழமை, 3 மே, 2010

    நூலின் சில பகுதிகள் – தொகுத்தளித்தவர் : திரு. ஆ. கணேசன்

    “அல்லவை நீங்க வேண்டு மென்றால்
    நல்லவை ஓங்க வேண்டும்”
    என்கிறார் மரு. எட்வர்டு பாச்.

    “அல்லவை தேய அறம் பெருகும் – நல்லவை
    நாடிய இனிய சொலின்”
    என்பது திருக்குறள் நெறி.
    “ஒரு நாள் காலை மரு.பாச் இயற்கை வெளியில் நடந்து சென்றபோது, ஒரு பூவிதழின் மீது படிந்திருந்த பனிநீர்த் துளியைக் கண்டார். அதன் கவர்ச்சியினால் அந் நீர்த் துளியைத் தம் நாக்கினால் தொட்டுச் சுவைத்த அளவிலேயே தம் உள்ளத்தில் புத்துணர்ச்சியும், உடலில் ஆற்றலும் பெருகுவதை உணர்ந்தார். மண்ணின் இயல்பு, காற்று, கதிரவ ஒளி என்னும் நான்கும் செடியின் தன்மை ஒன்றிணையும் போதுதான் அந் நன்மை உண்டாகிறது என்பது அவருக்குப் புலப்பட்டது”
    “யாம் இருக்க அச்சம் ஏன்? பழிக்கு அஞ்ச வேண்டும். மானம் போய்விடுமே என்று அஞ்ச வேண்டும். நம்மால் பிறருக்கு தீங்கு உண்டாகுமோ என்று அஞ்ச வேண்டும்”
    “அஞ்சுவது அஞ்சாமை பேதமை. அஞ்ச வேண்டிய வேண்டியவற்றிற்கு அஞ்சாமல் திரிவதும், அஞ்ச வேண்டாதவற்றிற்கு அஞ்சி நடுங்குவதும் தலைகீழ் நிலைதானே. இப்படி அஞ்சிக் கிடப்பவர்களை நோக்கித்தான் யாம் இருக்க அச்சம் ஏன் என்று மலர் மருந்துகள் கூறுகின்றன.”
    செருக்கு, கொடுமை, வெறுப்பு, தன் விருப்பு, அறியாமை, நிலையின்மை, பேராசை ஆகிய ஏழும் உண்மையான நோய்கள் அல்லது நோய்த் தொடக்க நிலைகள் என்பது மரு.பாச் அவர்களின் ஆய்வு.
    “மலர்ச்சி, மகிழ்ச்சிக்கு ஊற்றுக் கண் ஆகிறது. மலர்கள் மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தருவன.
    அம் மலர்களிலிருந்து கிடைக்கும், மருந்துகளும் நோயை நீக்கி, மலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் தருகின்றன என்பதில் வியப்பேதும் இல்லை.
    எனவே மலர் மருத்துவம் இயற்கையானது இனியது, எளியது. மெல்லியல்பானது, மலர்ச்சி ஊட்டுவது, மகிழ்ச்சியூட்டுவது. பிணி நீக்குவது இவற்றோடு முழுமையானது என்னும் சிறப்பையும் உடையதாகத் திகழ்கின்றது.
    அகத்துள், அகமாய் விளங்கும் மனத்தில் காணப்படும் உணர்வுப் பாதிப்புகளே இம் மருத்துவமுறையின் நோய்களாகும் முறையாகும்.”
    வழித்துணை – மீட்பு மருந்து
    “விழிக்குத் துணை திருமுன் மலர்ப்பாதங்கள் மெய்மைகுன்றா
    மொழிக்குத் துணை முருகா எனும் நாமங்கள் முன்பு செய்த
    பழிக்குத் துணை அவன் பன்னிருதோளும் பயந்ததனி
    வழிக்குத்துணை வடிவேலும் செங்கோடன் மயூரமுமே”

    சிற்றூர்ப் புறங்களில் காடு கரைக்குப் போகும் போது கை காவலுக்கு இருக்கட்டும் என்று நான்கு அல்லது ஐந்தடி நீளக் கோலை கையில் எடுத்துக் கொண்டு போவது வழக்கம். இரவில் இருளில் அதைத் தரையில் ஓசையுடன் ஊன்றிக் கொண்டே நடந்தால் பூச்சி பொட்டுகள் நடை பாதையிலிருந்து விலகிச் சென்று விடும், நீர்நிலைகளில் ஆழம் பார்க்கவும் உதவும். சில விலங்குகள் கோலைக் கண்டு அஞ்சி அருகில் வாரா. கையில் கோல் இருப்பதால் மனதில் தெம்பும் துணிவும் தாமாகவே அமையும். இப்படி பல நன்மைகள். இருவர் எதிரும் புதிருமாய் இரு சக்கர வண்டிகளில் சென்று கொண்டிருந்த போது, திருப்பத்தில் ஒருவரோடு ஒருவர் மோதிக் கீழே விழுந்திருக்கின்றனர். இருவருக்கும் சிராய்ப்பு காயம், வண்டிகளுக்கும் சிறிது சேதம். இந்நிலையில்தான் இருவரும் கைகலக்கக் கூடிய நிலையில் மருத்துவர்ஐயா கு.பூங்காவனம் காண நேர்ந்தது. அய்யா அடடே காயம் பட்டிருக்கிறதே என்று கூறிக் கொண்டே அவ்விருவருக்கும் கையில் இருந்த மருந்தை கொடுத்தார். இரு மணித் துளிகளில் நிலைமை மாறிவிட்டது. அவர்களின் குரல் தணிந்தது. சினமும் சிடுசிடுப்பும் தணிந்தன. பிறகு இருவரும் பேசாமல் அவரவர்கள் வண்டியை ஒட்டிக்கொண்டு அவரவர்கள் வழியில் சென்று விட்டனர்.
    பெத்லகேமின் விண்மீன் – (Star of Bethleham)
    பாறை முளரி – (Rock Rose)
    கிளமாட்டிசு – (Clematis)
    செரிப்பிளம் – (Cherryplum)
    இம்பேசன்சு – (Impatiens)
    இக் கவவைதான் மீட்பு மருந்து. மேலே சொன்ன அவ்விருவருக்கும் இம் மருந்துதான் கொடுக்கப்பட்டது. மீட்பு மருந்தைச் சில வேளைகள் உட்கொண்ட அளவிலேயே,
    “வலி நீங்கும், குருதி கொட்டுவது நிற்கும், அடிபட்ட புண் விரைந்து ஆறும். மருத்துவமனைக்குச் சென்று சேரும் வரை, கண்டிப்பாக முதலுதவியாகப் பயன்படும்”.
    அச்சம் தவிர் என்று தொடங்குவது தமிழ் அரிச்சுவடி. நமக்குள்ளே உள்ள ஆதன் அழிவில்லாதது. எதனாலும் வெல்லமுடியாதது. அதன் வழிப்பட்டு நாம் நிற்கும் போது நமக்கு அச்சம் தோன்றுவதில்லை.
    நோய் பற்றிய அச்சமே நாம் அஞ்சி நிற்கும் பலவும் எளிதாய் நமக்குள் நுழைவதற்கு வழி வகுத்து தீங்கு விளைவிப்பதாக உள்ளது.
    கண்ட மாலை, குண்டிக்காய், அண்மைச் சுரப்பிகள் மிகையாக சுரக்கின்றன. அச்சமும் அதனால் உண்டாகும் மிகைச் சுரப்பும் உடலில் நோய்ப்பாதிப்பை உண்டாக்குகின்றன.

    ஓமியோபதியின் நெடுநோய்க் கோட்பாடு

    omiyo_book3.PNGஓமியோபதியின் நெடுநோய்க் கோட்பாடு
    (Chronic Diseases – Theoretical Part)
    சாமுவேல் ஆனிமான்
    தமிழாக்கம் : மரு. கு. பூங்காவனம்
    வெளியீடு : வேங்கை பதிப்பகம்,
    80 ஏ, மேலமாசிவீதி, மதுரை – 1
    94439 62521

    ஓமியோ முரசு இதழில் வெளிவந்த நூல் மதிப்பீடு

    மாமேதை ஹானெமனின் Chronic Diseases ௲ Theoretical Part, 1828ல் வெளிவந்தது. இதன் தமிழாக்கத்தை ஆசிரியர் மரு.கு.பூங்காவனம் அவர்கள் நமக்களித்திருக்கிறார்கள்.
    இந்நூலாசிரியர் இதற்கும் முன்னதாக ஏழு மருத்துவ நூல்களை வெளியிட்டிருப்பதுடன், இன்னும் மூன்று மருத்துவ நூல்களை வெளியிட அச்சில் இருப்பது அறிந்து பெருமைபடுகிறோம். இதிலிருந்து ஹோமியோபதிக்கான ஆசிரியரின் கடின உழைப்பு பாராட்டத்தக்கதாக இருக்கிறது.
    ஆங்கில மொழி கடுநடையிலிருந்து, இலகுவாகப் புரிந்து கொள்வதற்காக, சொற்களில் சிக்கிக் கொள்ளாமல், மூலக்கருத்திலிருந்து விலகிப் போகாமல், மையப் புள்ளியை தெளிவாக விவரித்திருக்கிறார்.
    ஹோமியோபதியின் நெடுநோய்க் கோட்பாடு என்ற இந்நூலின் உதவியைக் கொண்டு மாமேதை ஹானெமனின் Chronic Diseases புத்தகத்தின் உட்கருத்தை, தமிழில் தெளிவாகத் தெரிந்து, புரிந்து, அல்லல்படும் மக்களின் நெடுநோய்களை நீக்கும் ஆற்றலை ஹோமியோபதி மருத்துவர்கள் அதிகரித்துக் கொள்ள இந்நூல் உதவுமென்று நம்புகிறோம்.

    அ.அப்துல் அஜிஸ்
    ஹோமியோ முரசு – நவம்பர் – 2012

    நூலின் சில பகுதிகள் தொகுத்தளித்தவர் : பொறிஞர் பா. திருநாவுக்கரசு

    மருத்துவ மாமேதை சாமுவேல் ஆனிமான் வழங்கிய மாபெரும கொடைகளாக உள்ளவை மருந்தியல் நெறிமுறை (Organon)யும், நெடுநோய்க் கோட்பாடும் (Chronic Diseases) ஆகும். இவற்றில் முழுமையாகத் தேர்ச்சி பெற்றால் அன்றி ஓமியோபதி மருத்துவப் பயிற்சியில் வெற்றிபெற முடியாது. அந்நூல்களில் தேர்ச்சி பெற்றவர்களும் அந் நூற் செய்திகளை அப்படியே பின்பற்றுபவர்களும் ஆற்றுகின்ற மருத்துவ அருஞ்செயல்கள் வியப்பு ஊட்டுபவையாய் உள்ளன.
    மரு. கு. பூங்காவனம்

    என்னை நானே இயன்றவரை மேம்படுத்திக் கொள்வதும், என்னைச் சுற்றியுள்ள எல்லாவற்றையும் இன்னும் நன்றாக ஆக்கிக் கொள்வதும் ஆகிய நோக்கத்துடன் நாம் இம் மண்ணுலகில் தோன்றியுள்ளேன் என்பதை அறியவில்லை என்றால் :-

    • எனக்கு மட்டுமே உடைமையாக உள்ளதும்;
    • அதையும் எனக்கு மட்டுமே உரிய கமுக்கமானதாக (secret) வைத்துக் கொண்டு அதனால் நான் பெரும்பயன் அடைவதற்கு வழிவகுப்பதாக உள்ளதும்;

    ஆகிய ஒரு கலையை – நான் இறந்து போவதற்கு முன் இவ் உலக மக்களின் பொதுநன்மை கருதி – அக்கலையை வெளிப்படுத்தாமல் வைத்துக் கொள்வேன் ஆயின், இவ் உலகத்தைச் செம்மைப் படுத்துவதற்குச் சிறிதும் தெரியாதவனாகவே உள்ளேன் என்று என்னை நான் கருதிக் கொள்ள வேண்டியதாகும்.
    - சாமுவேல் ஆனிமான் (1828)

    புறத்தோலில் எழும்பித் தோன்றிய சொறியைத் தவறான மருத்துவத்தால் அடக்கியதாலும், அல்லத வேறு முறைகளால் அது தோலில் இருந்து மறைந்து விடுமாறு செய்வதாலும் – (அதைத்தவிர) பிறவகையில் நல்ல உடல்நலம் வாய்க்கப் பெற்ற அத்தகையவர்களிடம் அதே வகையான (தோல் எழும்புதல்) அல்லது அதற்கு ஒத்த அறிகுறிகளுடன் அது மீண்டும் தோன்றுவத உறுதிப்பட்டுள்ளது.
    - மாமேதை ஆனிமான் (பக்கம் 26)

    மிகப்பல நெடுநோய்களுக்கும் – மிகப் பேரளவான நிலையில், அடிப்படையாய் விளங்குவது இச் சொறி நோயே ஆகும். அந் நெடுநோய்களுள் ஒவ்வொன்றும் பிறவற்றுடன் தலையாய முறையில் வேறுபட்டுள்ளவை போல் காணப்பட்ட போதிலும், உண்மையில் அவை எப்படி வேறுபட்டவை அல்ல.
    மாமேதை ஆனிமான் (பக்கம் 32)

    நமக்குத் தெரிந்தவரை, சொறியனே மிகப்பழமை வாய்ந்த நோய்மூலச் சார்பு நெடுநோய் ஆகும். அது பறங்கிப்புண் நோயையும், வெட்டை மருநோயையும் போலவே மிக்க சலிப்பை உண்டாக்குவது; ஆகவே அதை முழுமையாய்க் குணப்படுத்தினாலன்றி, மிக நீண்ட வாழ்நாளைக் கொண்ட மாந்தர் தம் கடைசி மூச்சு வரை அதை அழிக்க முடியாது. கட்டுடல் வாய்ந்த உடல்வாகுவின் முழுமையான வலிமையினாலும் அச் சொறியனை அழித்துப் போக்கமுடியாது.
    - மாமேதை ஆனிமான் (பக்கம் 34)

    ஓமியோபதி – கொள்கை விளக்கக் கட்டுரைகள்

    omiyo_book.PNGஓமியோபதி – கொள்கை விளக்கக் கட்டுரைகள்
    கு. பூங்காவனம்

    ஓமியோ முரசு இதழில் வெளி வந்த நூல் மதிப்புரை

    ஓமியோபதி மருத்துவம் எவ்வளவு எளிமையானதோ, அந்த அளவிற்கு கடுமையானதும் ஆகும். அதாவது, இம்மருத்துவத்தின் தத்துவங்களை சரியாகப் புரிந்து கொண்டால் மிக எளிமையாகவே இருக்கும். இந்த தத்துவங்களை ஆங்கிலத்தில் படிக்கும் போது, அம்மொழியை நன்கு தெரிந்தவர்களே தடுமாறித்தான் போகிறார்கள்.
    இதை நிவர்த்தி செய்யும் வகையில், ஓமியோபதி கொள்கை விளக்கக் கட்டுரைகள் நூலை எழுதியிருக்கிறார் மரு.கு. பூங்காவனம். இவர் சிறந்த தமிழ்ப் பற்றாளர் என்கிற வகையில், ஆர்கனானில் கூறப்பட்டிருக்கும் தத்தவங்களை, மிக எளிமையாக புரிந்து கொள்ளும் வகையில், அழகான தமிழ் நடையில் இந்நூலை எழுதியிருக்கிறார்.
    குறிப்பாக, பிற மொழி – ஆங்கில – கலப்பில்லாமல் இந்நூல் எழுதப் பட்டிருப்பது தனிச்சிறப்பாகும். அனைவரும் படிக்க வேண்டிய அவசியமான நூல்.
    ஆசிரியரின் வார்த்தைகளில் :
    ஓமியோபதியர் ஒவ்வொருவரும் ஓமியோபதி மருந்தியல் நெறிமுறை என்னும் மாபெரும் கலைக்கூடத்திற்குள் சென்றும், ஆங்குள்ள அரும் பொருள்களைக் கண்டறிந்து வியந்தும் மகிழ்ந்தும் இன்புறுதல் வேண்டும். அதற்கான படிக்கட்டுகளாக அமைந்தவையே இதிற் காணப்படும் இருபத்து மூன்று குறுங்கட்டுரைகள்.

    ஹோமியோ முரசு – ஜுலை – 2013

     

    நூலின் சில பகுதிகள் தொகுத்தளித்தவர் : திருமதி. விசயா கோவர்த்தனன்

    எது இயற்கை மருத்துவம் ?
    (Natural Laws and Homeopathy)

    இயற்கை விதிகள் மாறாதவை, செயற்கை விதிகள் இடத்துக்கு இடம், காலத்துக்கு காலம் தேவைக்கேற்ப என மாற்றம்பெறுபவை. இக் கோட்பாட்டை பொருத்து ஆராயும் போது உலகில் உள்ள மருத்துவ முறைகளில் ஒன்று மட்டுமே இயற்கை மருத்துவம் என்று குறிக்கத்தக்கதாக உள்ளது. அது, ஓமியோபதி மருத்துவம் மட்டுமே யாகும்.

    இயற்கை கற்பிக்கும் பாடம் :-

    ஏற்கனவே உள்ள ஒரு நோயும், அதற்கு ஒத்ததாகவும் அதைவிட வலிமையானதாகவும் உள்ள ஒரு நோயும் ஆகிய ஒத்த நோய்கள் இரண்டும் ஒரே நேரத்தில் உடம்பியக்கத்தில் இணையும் போது அதன் விளைவு முற்றிலும்ம வேறாகக் காணப்படுகின்றது. அத்தகைய நிலையில் இயற்கையின் செயல் முறைகளால் நோய் குணமாக்கப்படும் நிலையை நாம் காண்கின்றோம். ஆதலால் மாந்தராகிய நாமும் (அவ் இயற்கை முறையைப் பின்பற்றி) எவ்வாறு குணப்படுத்த முனைதல் வேண்டும் என்றும் பாடத்தைக் கற்றுக் கொள்ளலாம். (நெறி – 43)

    நீ முன்னாலே போனால் நான் பின்னாலே வருவேன்
    (Cause and Effect)

    “சிங்கோனா” மருந்து கசப்புச் சுவையுடையதாய் இருப்பதால் அது மலை(மலேரியா)க் காய்ச்சலைப் போக்குகிறது என்று காரணம். ஆகாத ஒன்றை காரணமாகக் கூறியதை திருத்த முற்பட்டதன் விளைவே ஓமியோபதி தோற்றத்திற்கு மூலமாக அமைந்தது. எனவே, காரண காரிய பெற்றோர்க்கு பிறந்த குழந்தையே ஓமியோபதி! அதன் ஒவ்வொரு உட்கூறும் காரிய தொடர்புடையது. சான்றாக சில;

    1. ஆவி வடிவு போன்ற (Spirit like) ஆற்றலைக் கொண்டது நோய்
    – இது காரணம்
    எனவே, ஆவி வடிவு போன்ற நிலையில உள்ள உயிராற்றல் அது
    பற்றிப் பாதிக்கிறது – இது காரியம்

    2. ஆவி வடிவுபோன்ற ஆற்றலை கொண்டது நோய் மீண்டும் – இது காரணம்
    எனவே, அதற்கு ஒத்ததும், அதனினும் வலிமையானதும், ஆவி வடிவானதும் ஆகிய மருந்தே அந்நோயை முற்றாக அழித்து ஒழிக்கிறது – இது காரியம்

    3. மருந்துப் பொருளில் நோயை உண்டாக்கும் ஆற்றல் உள்ளார்ந்து
    கிடைக்கிறது – இது காரணம்.
    அதனால் அது, அதற்கு ஒத்துள்ள நோயை போக்குகிறது – இது
    காரியம்

    இவை தொடர்பான நெறிமுறைகள் – 9, 11, 16, 21, 22 ஆகியவை.

    உயிராற்றல் பற்றிய உண்மை விளக்கம்
    (The Vital Force)

    ஓமியோபதியின் அடிப்படைக் கருத்துகளில் ஒன்றாகிய உயிராற்றல் பற்றிய உண்மையானதும் அறிவுக்கும் பொருந்துவதும் ஆகிய விளக்கம் வேண்டப்படுகின்றது. இவ் விளக்கத்தை பின்கண்டவாறு நான்கு நிலைகளில் காணலாம். அவை:

    முதல்நிலை விளக்கம் – உடம்பை இயக்கும் உயிராற்றல்

    இரண்டாம் நிலை விளக்கம் – உயிராற்றலும் அண்டப் பேராற்றலும்

    மூன்றாம் நிலை விளக்கம் – உயிராற்றலும் மன ஆற்றலும்

    நான்காம் நிலை விளக்கம் – உயிராற்றலால் நோயை குணப்படுத்துதல்

    இந்நூலில் பக்கம் 9, 10, 11, 12களில் விளக்கமளித்துள்ளார்.

    அதோடு -

    • உயிராற்றலின் பாதிப்பே நோய் (நெறி – 1
    •  உயிராற்றலின் மீட்சியே நாம் (நெறி – 12)
    •  உயிராற்றலும் உடலும் ஒன்றோடொன்று பிரிக்க முடியாத தொடர்புடையவை (நெறி – 15)
    • உயிராற்றலின் எதிர்வினைச் செயலால் நோய் குணமாகிறது, 

    என்று கூறியதோடு, உயிராற்றலின் பிற செயல்பாடுகளையும் மாமேதை ஆனிமான் ஆங்காங்கே சுட்டிக் காட்டியுள்ளார்.

    வாய்ப்பேச்சை அறிவது போலவே நோய்ப் பேச்சையும் அறிய வேண்டும்
    (Knowing the Symptoms)

    வாயுள்ளவன் பேசக்கடவன் – என்பது அறியப்பட்டதே ஆயின், நோய்களும் பேசுகின்றன! என்கிறார் மருத்துவ மாமேதை சாமுவேல் ஆனிமான். அந்நோய் பேச்சு மொழியைக் குறி என்றும் அறிகுறி என்றும் அவர் கூறினார். பக்கம் 17, 18, 19, 20 இந்நூலில் விளக்கம் உள்ளது.

    ஒரு கணினிப் பொறியாளர் கற்றுக் கொள்ளும் கணினி மொழிகளின் (Computer Language) அறிவுத்திறம் அவரை நன்னிலைக்கு உயர்த்துகிறது.

    ஓமியோபதியர்கள் தங்களுடைய குணமாக்கற் கலை(Healing Art)யில் வல்லவர்களாய் விளங்குவதற்கு நோய்களின் மொழிகளை குறிகள், அறிகுறிகள் ஆகிய இவற்றின் இயல்புகளை நன்றாகப் புரிந்துக் கொள்ளும் வல்லமையுடையவர்களாய்த் திகழ வேண்டுமென்றோ?

    ஒதுக்குப்புறம் (இடப்பாதிப்பு நோய்)
    (Local disease)

    நிறைய மச்சங்கள் இருப்பதால் நலமும் மிகுகின்றது, முதுமையடைவதும் தள்ளி போகின்றது என்னும் செய்தியாக ஓர் ஆங்கில நாளிதழில் வெளியானது. (“More moles means better health, delayed ageing” – The Times of India – dated : 24.11.2010)

    ஓமியோபதி மருந்தியல் நெறிமுறை (Organon)யில் (நெறி 201) விளக்கம் கொடுத்துள்ளார்.

    நீர் ஒட்டம் தடைப்படக் கூடாது என்பதற்காக, அங்கு அடித்து வரப்பட்ட மரக்கிளைகள் ஒதுக்கப்படுகின்றன – இயற்கையான செயல்பாடு.

    அகபாதிப்பு நோய் துன்பம் பெருகாமல் இருக்குமாறும் இன்றியமையாத உடற்பகுதிகளுக்குக் காப்பு அளிக்குமாறும் அந்நோயின் ஒரு பகுதி புறப் பாதிப்பாக ஒதுக்கப் படுகிறது. இது உடலியக்கச் செயல்பாடு.

    (அகப்பாதிப்பு துன்பம்) மச்சங்களாகி பெருகிய மடை மாற்றத்தால் நோய் பாதிப்பும் குறைகிறது. வாழ்நாளும் நீள்கிறது. – இது இலண்டன் மாநகர் அரசர் கல்லூரி ஆய்வுக் குழுவினரின் முடிவு, இவை அனைத்துக்கும் விளக்கமாய் அமைந்ததே இவ் ஓமியோபதி நெறிமொழி (Organon)

    இத்தனை சிறிய உருண்டை போதுமா?
    (Minimum Dose)

    பொருத்தமான ஓமியோபதி மருந்துகள் குணமாக்கும் செயலை எவ்வாறு தூண்டுகின்றன என்பது புரிந்தவுடன் அத்தகைய ஐயம் தோன்றாது.

    ஏனைய மருத்துவமுறை மருந்துகள் எல்லாம் உணவைப் போல உட் கொள்ளப்பட்டு செரிமானமாகும் நிலையில் தான் அவை செயல்படுகின்றன. ஆனால் ஓமியோபதி மருந்தோ, உணர்ச்சி நரம்பைத் தொட்டவுடனயே அதன் தூண்டுணர்வு தொடங்கி விடுகிறது என விளக்குகின்றார் மாமேதை ஆனிமான் என்று அதன் நெறிமுறைகளை 272, 284, 285, இந்நூலில் மருத்துவர் பூங்காவனம் ஐயா அவர்கள் எழுதியுள்ளார்.

    பேச தெரிந்தால் போதாது, படிக்கத் தெரிந்தால் போதாது எழுதிக் காப்பதே இன்றியமையாதது.
    (Case Record)

    ஓமியோபதியில் நோய்க்குறிப்புகளை நுணுக்கமாகவும் விரிவாகவும் சரிநுட்ப (Accurate)மாகவும் எழுத வேண்டும் என்பதை வலியுறுத்தும் சில நெறிமொழிகள் கூறப்பட்டுள்ளன. செயற்கை நோய் குறிப்பையும், இயற்கை நோய்க்குறிப்பை எழுதும் முறையும் நெறி எண்களை அனைத்தும் கொடுத்து விளக்கியதோடு நோய்க்குறிப்பில், மிக இன்றியமையாத ஒரு சிறு அறிகுறி விடுபட்டாலும் அங்கே நோய் குணமாவது தள்ளியும் தப்பியும் போய்விடும் என்பதால், அவ் அவலத்தைத் தவிர்பபதற்காகவே நோய்க் குறிப்பை எழுத வேண்டும். அதையும் மிக சரியாக எழுத வேண்டும் என்பதும் அவ்வாறு எழுதி கொள்வதால் உண்டாகும் அளவில்லாத நன்மைகளை வலியுறுத்துவதற்காகவும் இதுபற்றிய விரிவான நெறிமுறைகளை மாமேதை ஆனிமான் எடுத்துரைத்துள்ளார் என்றும் இக் கட்டுரையை பேராசிரியர் மற்றும் மருத்துவர் பூங்காவனம் ஐயா அவர்கள், ஒரு நல்ல மருத்துவம் தமிழ் மக்களுக்கு போய் சேர வேண்டும், பயன் அடைய வேண்டுமென்றும் எந்த ஒரு எதிர்பார்ப்பும் இல்லாமல் அயராத உழைப்பும் பெரு முயற்சிக் கொண்டு பல நூல்களை எழுதியுள்ளார் அனைவரும் படித்து பயன்பெற்று நல் உள்ளம் கொண்ட மாமனிதரை வாழ்த்தி போற்றிடுவோமாக.