மன மருத்துவமும் மலர் மருத்துவமும்

malar_book2.PNGமன மருத்துவமும் மலர் மருத்துவமும்
ஆசிரியர் : எட்வார்டு பாச்
தமிழாக்கம்: மரு. கு. பூங்காவனம்
வெளியீடு : வேங்கை பதிப்பகம்,
80 ஏ, மேலமாசிவீதி, மதுரை – 1
94439 62521

நூலின் சில பகுதிகள் தொகுத்தளித்தவர் : திருமதி. கீதாவாணி
நோயும் மருந்தும்

நோயின் தோற்றத்திற் காரணத்திலிருந்து மக்களின் எண்ணத்தைத் திசை திருப்பி, அதனால் நோயை நன்கு தாக்கும் முறைகளிலிருந்தும் திசை திருப்பிவிட்டது.

நோயை உடல் அளவில் தோற்றமுடையதாகக் காட்டியதால் நோயிலிருந்து உண்மையாக குணமடைய முடியாது.

நோய்க்காரணம்:

ஆதனுக்கும் (ஆன்மா) மனத்திற்கும் உள்ள முரண்பாட்டின் விளைவே நோய்.

அடிப்படை நெறிமுறைகள்

நோயின் இயல்பைப் புரிந்து கொள்வதற்குச் சில அடிப்படை உண்மைகளை ஏற்றுக் கொள்ள வேண்டும். அவை:

 1. அதன் இயல்பு
 2. ஆளுமை வடிவின் இயல்பு,
 3. மண்ணுல வாழ்வு
 4. ஒத்திசைவும் – முரண்பாடும்
 5. ஒருமைப்பாடு.

நம்முடைய பிழைபாடுகள் :

 1. நம்முடைய ஆதனுக்கும் நம் ஆளுமைவடிவுக்கும் இடையே உண்டாகும் வேறுபாடு
 2. ஒருமைப்பாட்டுக்கு எதிரான கரிசு (பாவ)ச் செயலாகப் பிறருக்குச் செய்யப்படும் கொடுமைகள் அல்லது தவறுகள்

மேலும் இரண்டு பெருந்தவறுகளும் காணப்படுகின்றன அவை :

 1. நம் ஆதன் அறிவுறுத்துவதை ஏற்றுக் கீழ்படியத் தவறுதல்
 2. ஒருமைபாட்டுக்கு எதிராகச் செயல்படுதல் – என்பன
உண்மையான நோய்கள்

நோயின் தொடக்க நிலை – தன் விருப்பு, தொடக்க நிலையில் உண்மையான நோய்களாக உள்ளவை. அ) செருக்கு, ஆ) கொடுமை, இ) வெறுப்பு, ஈ) தன் விருப்பு, உ) அறியாமை ஊ) நிலையின்மை, எ) பேராசை என்னும் குறைபாடுகளே.

எண்ணிப் பார்த்தால், இவை ஒவ்வொன்றும் ஒருமைப்பாட்டுக்குப் புறம்பானவையாக உள்ளவை என அறியலாம். இக் குறைபாடுகளே உண்மையான நோய்கள் ஆகும். இவை தவறானவை என உணரும் நிலைக்கு நாம் வளர்ச்சி யடைந்த பின்னும் இவை நம்மிடமிருந்து நீங்காமல் தூண்டப்பட்டுத் தொடர்வதனால் நம் உடலுக்கு ஊறுபடுத்தும் விளைவுகளாகிய பிணிகள் உண்டாகியுள்ளன.

நோய்கள் நீங்கும் வழி

நோயிலிருந்து முழுமையாய்க் குணமடைய வேண்டுமாயின், குணமாக்கும் மருத்துவக் கலைகளுள் சிறந்த ஒன்றைத் தேர்ந்து அதன் மூலம் நமது உடல் வழித் தொல்லையைப் போக்க முற்படுவதுடன், நம்முடைய இயல்பில் உள்ள பிழையைத் தெரிந்து கொண்டு நம்மால் முடிந்தவரை முயன்று அப்பிழையைப் போக்கிக் கொள்ளவும் முற்படுதல் வேண்டும்.

மருத்துவரும் மருத்துவக் கலையும்

இவ் அண்டத்தின் மாற்றம் இல்லாத விதிகளின் உண்மையை மாந்த இனம் புரிந்து கொண்டும், பணிவோடும் கீழ்ப்படிதலோடும் அவ்விதிகளை ஏற்று நடந்தும், அதனால் ஆதனுக்கும் தனக்கும் இடையே அமைதியை உண்டாக்கியும்; வாழ்வில் உண்மையான உவகையும் மகிழ்ச்சியையும் ஈட்டிக் கொள்வதையும் பொருத்தே நோய்களை ஒழிக்க இயலும். துயர்உறும் நோயாளி அவ்வுண்மை பற்றிய அறிவைப் பெற உதவுவதும், ஒத்திசைவு உண்டாவதற்கான வழிகளைச் சுட்டிக் காட்டுவதும்; அந் நோயாளியிடத்தில் உள்ளதாகிய எல்லாவற்றையும் வெல்லும் ஆற்றல் கொண்ட அத் தெய்வீகத்தை அவர் நம்புவதற்கு ஊக்குவிப்பதும், ஆளுமை வடிவையும் உடலையும் குணப்படுத்தி ஒத்திசைவு உண்டாக்க வல்லததாகிய மருந்து பொருளை அவருக்குக் கொடுப்பதும் ஆகிய இவை மருத்துவர்தம் பங்காகும்.

நமக்கு நாமே உதவிக் கொள்ளுதல்

முரண்பாடு இல்லாத ஆளுமை வடிவமே நோய்தடுப்பு ஆதலால் நோய் நம்மைத் தாக்குவதற்கு அரிதாகுமாறும் இயலாதவாறும் நாம் நம் மனத்தையும் உடலையும் ஒத்திசைவுடன் வைத்துக் கொள்ள வேண்டும்.

தியானம், நம் குறைபாட்டுக்கு எதிரான நல்லியல்புகளைப் படிப்படியாய்ப் பெருக்கிக் கொள்ளுதல், சலிப்புணர்வை வளர்த்தல், உடலோம்பல், மற்றும் அகத்தூய்மை.

வெற்றிக்கு வழி

நோயை வெல்வதற்கு நாம் பின்கண்டவற்றை முதன்மையாய்ச் சார்ந்திருக்கலாம் அவை :

 1. நம் இயல்பிலேயே உள்ளதாகிய தெய்வீகத்தை வளர்ந்த அதனால் பிழைபாட்டைப் போக்குவதற்கு நமக்குள்ள வலிமையை உணர்தல்
 2. ஆதனுக்கும் ஆளுமை வடிவுக்கும் உள்ள ஒத்திசைவற்ற நிலையே நோய்க்கான அடிப்படைக் காரணம் என்னும் அறிவைப் பெறுதல்
 3. அத்தகைய தவற்றுக்கு எதிரான நல்லியல்பை வளர்த்துக் கொள்வதால் அத்தவற்றைப் போக்குதல்.
மலர் மருத்துவம்
மேதை எட்வர்டு பாச் அவர்களின் முன்னுரை :

நினைவுள்ளவரை மாந்த இனத்துக்குக் கிடைத்துள்ள முழுச்சீர்மையான மருத்துவ முறை இதுவேயாகும். இதற்கு நோய்களைக் குணமாக்கும் ஆற்றல் இருப்பதோடு வீடுகளில் பயன்படுத்தத் தக்கவாறு எளிமையானதாகவும் இஃது உள்ளது.

தெய்வீக அருளால் நமக்குக் காட்டப்பட்டுள்ள இம் மருத்துவமுறை, நமது அச்சம், கவலை, மனக்கவற்சி முதலான உணர்வுகளே நோய்கள் நம்மைத் தாக்குவதற்கு வழிவகுக்கின்றன என்பதைக் காட்டுகிறது. நம்முடைய அச்சம், வருத்தம், கவலை, முதலானவற்றுக்குப் பண்டுவம் பார்ப்பதால் நம்முடைய நோய் துன்பங்களிலிருந்து நமக்கு விடுதலை கிடைப்பதோடு, எல்லாவற்றையும் படைத்தவரின் அருளால் நமக்குக் கிடைத்துள்ள இம்மூலிகைகள் நம்முடைய அச்சத்தையும் கவலையையும் போக்கி நமக்கு மேலும் மகிழ்ச்சியும் நன்மையும் கிடைக்குமாறு செய்கின்றன.

38 மருந்துகளும் பின்கண்டவாறு 7 தலைப்புகளில் சுட்டப்படுகின்றன – ஏழு வகை மன நிலையினர்.

 1. அச்ச உணர்வு கொண்டவர்கள்
  1. இராக்ரோசு
  2. மிமுலசு
  3. செரிபிளம்
  4. ஆசுபென்
  5. இரெட் செசுட்நட
 2. உறுதியின்மையால் துன்புறுவோர்
  1. செராட்டோ
  2. கிளராந்தசு
  3. சென்சன்
  4. கோர்சு
  5. ஆர்ன்பீம்
  6. வைல்டு ஓட்
 3. சூழலுக்கேற்பப் போதுமான ஆர்வம் இல்லாதவர்
  1. கிளமாட்டிசு
  2. அனிசக்கிள்
  3. வைல்டு ரோசு
  4. ஆலிவ்,
  5. வைட்செசுட்நட்
  6. மசுடர்டு
  7. செசுட் நட் பட்
 4. தனிமை உணர்வினர்
  1. வாட்டர் வயலட்
  2. இம்பேசன்சு
  3. ஈதர்
 5.  எண்ணங்கள், தாக்கங்கள் பற்றிய மிக்குணர்வு உடையோர்
  1. அக்ரிமொனி
  2. செண்டாரி
  3. வால்நட்
  4. ஆல்லி
 • நம்பிக்கை இழப்பு அல்லது வருத்தத்தில் தோய்ந்திருப்போர்
  1. 1) இலார்சு
  2. பைன்
  3. எல்ம்
  4. சுவீட் செசுட்நட்
  5. இசுடார் ஆஃப் பெத்லேகம்
  6. வில்லோ
  7. ஓக்
  8. கிராப் ஆப்பிள் 
 • பிறர் நலத்தில் மிகவும் அக்கறை காட்டுவோர்
  1. சிகோரி
  2. வெர்வைன்
  3. வைன்
  4. பீச்
  5. இராக் வாட்டர்
 • எல்லாவற்றையும் உண்டாக்கிய பேரருள் கொண்ட படைப்பாளர், நம் மீது கொண்ட அன்பினால், வயல் வெளிகளில் மூலிகைகளை ஆக்கிக் கொடுத்து அவர் நம்மை நலப்படுத்தவதற்காக நம் நெஞ்சில் உவகையும் நன்றிப் பெருக்கும் கொண்டவர்களாய் இருப்போமாக.

  Leave a Reply

  Your email address will not be published. Required fields are marked *