Monthly Archives: May 2015

காணாமல் போன நோய்கள்

malar_book3.PNG
ஆசிரியர் : மரு.கு.பூங்காவனம்
விலை: ரூ.60
வெளியீடு : எழுத்தாணி
288, மரு. நடேசன் சாலை,
திருவல்லிக்கேணி, சென்னை – 600 066
94452 07501

நூல் மதிப்புரை – ஓமியோ முரசு

மலர் மருத்துவ முறையை உருவாக்கிய மேதை பாச், மனநிலையை அடிப்படையாகக் கொண்டு, மலர் மருத்துவத்தின் மூலம் நோய்களை தீர்க்கமுடியும் என்கிறார். அதனடிப்படையில் பெங்களூரைச் சேர்ந்த மரு.கு.பூங்காவனம், மலர் மருத்துவ முறையில் குணப்படுத்திய தனது அனுபவங்களை விவரித்திருக்கிறார். மேலும், ஓமியோபதி உலகம் எனும் ஆங்கில இதழில் வெளிவந்த பாச் அவர்களின் கட்டுரைகளை தமிழாக்கம் செய்து வெளியிட்டுள்ளார் ஆசிரியர். வித்தியாசமான நோய்களை ஆசிரியர் குணப்படுத்திய விதம் ஆச்சர்யமாகவும், பாரட்டும்படியும் உள்ளது. அனைவரும் படிக்க வேண்டிய சிறந்த நூல்.

ஹோமியோ முரசு – மே – 2013

இணையத்தில் படிக்க விரும்புபவர்கள் இங்கேயே படிக்கலாம்.

வேண்டுமானால் பதிவிறக்கமும் செய்து கொள்ளலாம்.
இங்கே சொடுக்கவும்
 

வீட்டுக்கு வீடு ஓமியோபதி

omiyo_book2.PNGவீட்டுக்கு வீடு ஓமியோபதி

ஆசிரியர் : மரு.கு.பூங்காவனம்
வெளியீடு : வேங்கை பதிப்பகம்,
80 ஏ, மேலமாசிவீதி, மதுரை – 1
94439 62521

மாற்றுமருத்துவம் இதழில் வெளிவத்த நூல் மதிப்புரை

நோயாளிக்கு உடல் நலத்தை மீட்டுத் தருதலே மருத்துவர்தம் உயர்வான ஒரே தொண்டு ஆகும். இதுவே குணப்படுத்துதல் எனப்படும் என்று மாமேதை ஹானிமன் ஹோமியோபதிச் சட்ட நூல்கள் ‘ஆர்கனான்’ முதல் மணிமொழியில் அறிவிக்கிறார். அத்தகைய குணப்படுத்தும் உயர்வான தொண்டாற்றத் தகுதியான ஓர் உன்னத மருத்துவமுறையே ஹோமியோபதி.
உலகின் இரண்டாவது பெரிய மருத்துவமுறை, மாற்று மருத்துவங்களில் நவீனமானதும், அறிவியல் மற்றும் கலை நுட்பங்கள் சார்ந்த அடிப்படைகளை உள்ளடக்கியதுமான மருத்துவமுறை. இதனை வீட்டுக்கு ஒருவரேனும் கற்றுப் பயன் பெற வேண்டும் எனும் உயர் நோக்கோடு மரு.பூங்காவனம் அவர்கள் இந்நூலினை அழகிய தமிழில் இனிய ஆற்றொழுக்கு நடையில் பெரு முயற்சிகளோடு எழுதியிருப்பது பாராட்டுக்குரியது.
தமிழ் மொழியில் ஹோமியோபதி நூல்கள் குறைவு; அதிலும் முழுமைப் பயன்பாட்டு நூல்கள் மிகமிகக்குறைவு, எனும் நிலையை மாற்றவும் ஹோமியோபதியை மக்கள் மருத்துவமாகப் பரப்பவும், மாற்று மருத்துவத் துறையில் மறுமலர்ச்சி காணவும் இந்நூல் குறிப்பிடத்தக்க பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.
சுமார் 390 பக்கங்கள் கொண்ட இந்நூலைப் பயில்வோர் ஹோமியோபதியின் முழுப் பரிமாணங்களையும், ஆழ அகலங்களையும், நலமாக்கும் ஆற்றல்களையும் அறிந்து பயன்படமுடியும். ஹோமியோபதியின் தோற்றம் முதல், அதன் கொள்கைகள், நோய்நாடலின் உத்திகள், 60 மருந்துகளின் குண விளக்கங்கள். ‘12 TISSUE REMEDIES’ எனப்படும் தாது உப்பு மருந்துகளின் குண விளக்கங்கள் பயன்பாடுகள், பாச்மலர் மருத்துவம் குறித்து சுருக்கமான செய்திகள், அருமையான ஹோமியோபதி முதலுதவிக் குறிப்புகள் இவற்றுடன் உடலியல் உடலியங்கியல் கட்டுரைகள் என ஹோமியோபதியர்களுக்கும், மாற்று மருத்துவர்களுக்கும் பயன்மிகு கல்வி தரும் பல்வேறு அம்சங்கள் நூலில் தொகுக்கப்பட்டுள்ளன. ஹோமியோபதி மருத்துவம் குடும்பக்கலைகாரர் ஒன்றாகத் திகழ்ந்து நாடு தழுவிய நன்மைகளைப் பரப்ப வேண்டும் எனும் நன்னோக்குடன் எழுதப்பட்டுள்ள இந்நூலை நோய்களிலிருந்து நிவாரணம் பெறப் பெருந்தொகையும், நேரமும், ஆற்றலும் செலவிட்டுக் கொண்டிருக்கும் இன்றைய சமுதாயத்தின் அனைத்துப் பகுதியினரும் வாங்கிப் படித்து ஹோமியோபதியின் பயனறிந்து குடும்ப ஆரோக்கியத்தின் அடிப்படைகளை வலிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்.

மாற்றுமருத்துவம் – இருமாத இதழ் மார்ச் – ஏப்ரல் 2014

இந்நூலை இங்கேயே நீங்கள் படிக்கலாம்
 

பதிவிறக்கம் செய்ய வேண்டுமானால் இங்கே சொடுக்கவும்